azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Adi Shankara asks, "Who are you, who am I, where did I come from, where am I going, what is the nature and purpose of all this movement and change, is there any stable base, any goal, direction or director? (Kasthwam, koham, kutha ayatah?) Do not brush aside these questions from your mind. Each one of you gets this and it harasses you, when you are alone with something grand and awe-inspiring in Nature, or with some terrible or shocking incident in your own experience. It is unwise to forgo these precious moments and turn again to the humdrum of life, without pursuing the inquiry to which you are prompted. Guru comes to warn and awaken. He reveals the truth and encourages you to progress towards it. Unless you have the yearning, the questioning heart, and the seeking intelligence, he cannot do much. The hungry can be fed; the one without hunger will discard food as an infliction. (Divine Discourse, Jul 14, 1965)
COME INTO THE WORLD WITH THE QUESTION,"WHO AM I?"
LEAVE IT WITH THE ANSWER, "HE I AM". - BABA
ஆதி சங்கரர், ‘’ நீ யார், நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், நான் எங்கு போய்க் கொண்டிருக்கிறேன், இந்த அனைத்து செயல்கள் மற்றும் மாற்றங்களின் தன்மையும், குறிக்கோளும் என்ன, ஒரு ஸ்திரமான ஆதாரமோ, ஏதாவது குறிக்கோளோ, திசையோ அல்லது இயக்குனரோ இருக்கிறாரா ( கஸ்த்வம், கோஹம், குத ஆயாதஹ) ‘’ என்று கேட்கிறார். இந்தக் கேள்விகளை உங்கள் மனதிலிருந்து உதாசீனப்படுத்தி நீக்கி விடாதீர்கள். நீங்கள் தனியாக இயற்கையின் ஏதோ மகத்தான மற்றும் அச்சமும், வியப்பும் ஊட்டும் ஒன்றுடன் இருக்கும் போதோ அல்லது உங்களது சொந்த அனுபவத்தில் ஏதோ பயங்கரமான அல்லது அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழும் போதோ, உங்கள் ஒவ்வொருவருக்கும் இது வந்து உங்களை வாட்டுகிறது. இந்த விலை மதிப்பற்ற தருணங்களை கைவிட்டு விட்டு, மறுபடியும் சாரமற்ற வாழ்க்கையை நோக்கித் திரும்பி, நீங்கள் உந்தப்பட்ட இந்த ஆராய்ச்சியைத் தொடராமல் இருப்பது விவேகமற்ற செயலாகும். குரு உங்களை எச்சரித்து, எழுப்புவதற்காக வருகிறார். அவர் சத்தியத்தை வெளிப்படுத்தி, அதை நோக்கி முன்னேற ஊக்குவிக்கிறார். உங்களுக்கு அந்த தாபமும், ஆராயும் இதயமும், தேடும் புத்தியும் இல்லை என்றால், அவராலும் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. பசியுள்ளவருக்கு உணவளிக்க முடியும்; பசியற்ற ஒருவர், உணவை ஒரு சுமையாகக் கருதி, ஒதுக்கித் தள்ளி வைத்து விடுவார்.
“நான் யார்? ‘’ என்ற கேள்வியுடன் இந்த உலகத்திற்கு வாருங்கள்; "இறைவன் நானே ‘’ என்ற விடையுடன் இதை விட்டுச் செல்லுங்கள். -பாபா