azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 25 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 25 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
There are four kinds of temples: One, Vidyalaya (the temple of learning); second, Bhojanalaya (the temple of food); third, Vaidyalaya (the temple of healing) and Devalaya (the temple of God). All the four are places of worship for man. You go to a Bhojanalaya (also means hotel or restaurant), eat good and tasty food you like and come out happy. You go to a Vaidyalaya (hospital), consult a doctor and only receive prescribed treatment for the illnesses you are suffering from. When you go to a Vidyalaya (an educational institution) you seek only knowledge in the subjects you are interested in. Similarly when you go to a Devalaya (temple), ask yourself, do you conduct yourself properly? In a temple you should be concerned only with worship. Instead of concentrating the mind on the Divine, why do you allow it to wander hither and thither and think about useless mundane affairs? Remember, if only you secure the grace of God, everything will be accomplished easily! (Divine Discourse, Aug 7, 1988)
WHEN ANIMAL FEELINGS ARE WASHED OUT, DIVINE FEELINGS BEGIN TO FLOW FREELY. - BABA
நான்கு விதமான ஆலயங்கள் உள்ளன; ஒன்று வித்யாலயா ( கல்வி தரும் கோவில்), இரண்டாவது போஜனாலயா ( உணவு அளிக்கும் கோவில் ), மூன்றாவது, வைத்யாலயா ( சிகிச்சை அளிக்கும் கோவில் ), நான்காவது தேவாலயா ( இறைவனது கோவில் ). இந்த நான்குமே மனிதன் வழிபட வேண்டிய இடங்களாகும். நீங்கள் ஒரு போஜனாலயாவிற்குச் சென்று, நல்ல மற்றும் சுவையான உணவை உண்டு, சந்தோஷமாக வெளியில் வருகிறீர்கள். நீங்கள் ஒரு வைத்யாலயாவிற்குச் சென்று, ஒரு மருத்துவரை கலந்தாலோசித்து, உங்களை வருத்தும் நோய்க்குத் தேவையான சிகிச்சையை மட்டும் பெறுகிறீர்கள். ஒரு வித்யாலயாவிற்குச் செல்லும் போது, உங்களுக்குப் பிடித்தமான பாடங்களின் அறிவை மட்டுமே நாடுகிறீர்கள். அதைப் போலவே, ஒரு தேவாலயாவிற்குச் செல்லும் போது, நீங்கள் அங்கு சரியான முறையில் நடந்து கொள்கிறீர்களா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு கோவிலில் நீங்கள் வழிப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இறைவன் பால் மனதைக் குவிப்பதற்கு பதிலாக, நீங்கள் அதை ஏன் இங்கும் அங்கும் திரிந்து, உலகியலான வேலைகளைப் பற்றி சிந்திக்க அனுமதிக்கிறீர்கள் ? இறை அருளை நீங்கள் பெற்று விட்டால் மட்டுமே, ஒவ்வொன்றையும் எளிதாக சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் !
மிருகப் பண்புகள் நீக்கப் பட்டவுடன், தெய்வீகப் பண்புகள்
சுதந்திரமாக ஊற்றெடுக்கத் தொடங்கும்- பாபா