azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
The evil deeds of the wicked and the good deeds and yearning of the righteous are responsible for the advent of Avatars. The Narasimha Avatar (God incarnating as half-man and half-lion) was due to the great devotion of Prahlada and the bad qualities of Hiranyakashipu (Prahlada's father). God descends in response to the yearning and actions of people. Here are two simple examples. Crops grown on the ground look up to the skies for rain. They cannot reach up to the clouds. So, the clouds come down in the form of rain to provide water to the crops. Another example: There is an infant crawling on the floor. It wants its mother but it cannot jump up to her. So, the mother bends down, takes the child and caresses it to make it happy. In the same manner, to offer relief to devotees, to nurture, protect and foster them, the Divine comes in the human form to give them joy. (Divine Discourse, Sep 15, 1988)
GOD IS THE NEAREST, THE DEAREST, THE MOST LOVING, THE MOST EAGER COMPANION,
COMRADE AND KINSMAN OF EVERY INDIVIDUAL. - BABA
தீயவர்களின் கொடிய செயல்களும், நல்லோரின் நற்செயல்கள் மற்றும் ஆவலுமே, அவதாரங்கள் தோன்றுவதற்கான காரணமாகும். பிரஹலாதனின் தலைசிறந்த பக்தி மற்றும் அவனது தந்தையான ஹிரண்யகசிபுவின் தீய குணங்களின் காரணமாகவே, நரசிம்ம அவதாரம் தோன்றியது. நல்லோர்களின் ஆவல் மற்றும் மனிதர்களின் செயல்களின் காரணத்தால் தான் இறைவன் அவதாரமாக இற(ர)ங்கி வருகிறான். இங்கு இரண்டு எளிய உதாரணங்களைச் சொல்லாம். பூமியில் வளரும் பயிர்கள், மழைக்காக வானத்தை எதிர் நோக்குகின்றன. அவை, மேகங்களின் உயரத்திற்கு எட்ட முடியாது. எனவே தான் மேகங்கள் பயிர்களுக்கு நீர் அளிக்கும் வண்ணம், மழையாக இறங்கி வருகின்றன. மற்றொரு உதாரணம்.ஒரு சிறு குழந்தை தரையில் தவழ்ந்து கொண்டு இருக்கிறது. அது தனது தாயை நாடுகிறது , ஆனால், அவளது உயரத்திற்கு அதனால் எம்ப முடியாது. எனவே தான் தாயானாவள், குனிந்து அந்த மழலையைத் தூக்கி வைத்துக் கொண்டு, அதைக் கொஞ்சி மகிழ்விக்கிறாள். அதைப் போலவே, பக்தர்களுக்கு நிவாரணம் அளித்து, அவர்களைப் பேணிக் காப்பதற்காக, இறைவன், அவர்களுக்கு ஆனந்தம் அளிக்க மனித உருவில், இற(ர)ங்கி வருகிறான்.
இறைவனே,ஒவ்வொரு ஜீவராசிக்கும், மிகவும் நெருக்கமான,பிரியமான, நேசமான, ஆர்வம் மிக்க, துணைவனும், தோழனும், உறவினனும் ஆவான். - பாபா