azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 19 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 19 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The world is a manifestation of the three gunas (Sattva, Rajas and Tamas). When selfishness and self-interest are rampant, people forget kindness and compassion, when the forces of injustice, immorality and untruth grow to monstrous proportions and indulge in a death-dance, the Atmic principle, Divine Mother Shakti, takes on the Rajasic form to suppress and win over the dark forces of evil, and protect Sattvic qualities. This is the inner meaning of the Dasara festival. During the ten days of the Dasara Festival, ask yourself, has the Divine Mother destroyed the 10 demons (rakshasas) within you? Rakshasas are not demonic beings but wicked qualities. Arrogance, bad thoughts, lust, anger, delusion, greed, pride, envy, ego, and hatred are the demons that must be destroyed. You must decide for yourself whether you are now a Ravana or Rama according to your qualities! Embodiments of Divine Love! From today, lead your life with selfless love and live in peace and joy! (Divine Discourse, Oct 18, 1991)
WHEN ANIMAL FEELINGS ARE WASHED OUT, DIVINE FEELINGS BEGIN TO FLOW FREELY. - BABA
இந்த உலகம்,ஸத்வ, ரஜஸ் மற்றும் தமோ என்ற முக்குணங்களின் வெளிப்பாடே. எப்போது, சுயநலமும்,சுயலாபமும் பரவலாகி,மனிதர்கள் கனிவு மற்றும் கருணையை மறந்து இருக்கும் போதும், அநீதி,ஒழுங்கீனம் மற்றும் அசத்தியத்தின் சக்திகள் பிரும்மாண்ட ரூபம் ஏற்று ஒரு கோர தாண்டவம் ஆடுவதில் ஈடுபடும் போதும், ஆத்ம தத்துவமான தெய்வீக சக்தி மாதா, தீயவற்றின் சக்திகளை அடக்கி அழித்து, ஸத்வ குணங்களைக் காப்பதற்கு, ரஜோ மயமான ரூபத்தை ஏற்று வருகிறாள். இதுவே தசரா பண்டிகையின் உள் அர்த்தமாகும். தசரா பண்டிகையின் பத்து நாட்களில், உங்களுள் உள்ள பத்து அசுரர்களை (ராக்ஷசர்கள் ) ஸ்ரீதுர்க்கா மாதா அழித்து விட்டாளா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அசுரர்கள் என்றால், ராக்ஷசர்கள் என்று பொருளல்ல ; அவை தீய குணங்களே.இறுமாப்பு,தீய சிந்தனைகள், காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம்,அஹங்காரம் மற்றும் த்வேஷம் ஆகியவையே ,அழிக்கப் பட வேண்டிய அசுரர்கள். இப்போது, உங்களது குண நலன்களுக்கு ஏற்ப, நீங்கள் ஒரு ராவணனா அல்லது ராமனா என்று, நீங்களே முடிவ செய்ய வேண்டும் ! தெய்வீக ப்ரேமையின் திருவுருவங்களே ! இன்றிலிருந்து, தன்னலமற்ற ப்ரேமையுடன் உங்கள் வாழ்க்கையை நடத்தி, சாந்தி, சந்தோஷங்களுடன் வாழுங்கள்.
மிருகப் பண்புகள் நீக்கப் பட்டவுடன், தெய்வீகப் பண்புகள்
சுதந்திரமாக ஊற்றெடுக்கத் தொடங்கும்- பாபா