azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Everyone must consider it their foremost duty today to revere one’s own mother as divine and serve her, regardless of country or circumstance. If you cannot respect and serve your mother who bore you for nine months, brought you into the world and reared you over the years, who else are you likely to respect? Lord Sri Rama Himself declared that one's mother and motherland are greater than even heaven. Maternal love is akin to that of the Creator who protects this infinite cosmos in countless ways. The Navaratri festival teaches this profound truth. One must remember that reverence to one's own mother is one's paramount duty. If one's mother is unhappy, all the expenditure one incurs and all the worship one offers in the name of Durga, Lakshmi and Saraswati during the Navaratri festival will yield no fruit. (Divine Discourse, Oct 14, 1988)
RECIPROCATE TO YOUR MOTHER THE SAME LOVE AND SPIRIT OF SACRIFICE WITH WHICH SHE RAISED YOU. - BABA
எந்த நாட்டிலும் அல்லது எந்த சந்தர்ப்பத்திலும், ஒவ்வொருவரும், தங்களது சொந்தத் தாயைத் தெய்வமாகவே கருதி, அவளுக்குச் சேவை செய்ய வேண்டும். உங்களை ஒன்பது மாதம் சுமந்து, உங்களை இந்த உலகிற்குக் கொண்டு வந்து, பல வருடங்கள் உங்களைப் பேணி வளர்த்த தாயை நீங்கள் மதித்து,அவருக்குச் சேவை செய்யவில்லை என்றால், நீங்கள் யாரைத் தான் மதிக்கப் போகிறீர்கள்? பகவான் ஸ்ரீராமரே, ஒருவரது தாயும், தாய்நாடும், சொர்க்கத்தை விடவே உயர்ந்தவை என்று பறைசாற்றினார். தாயின் ப்ரேமை, இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தைப் படைத்து, எண்ணற்ற வழிகளில் அதைக் காக்கும் இறைவனது ப்ரேமையைப் ஒத்ததாகும். நவராத்திரித் திருவிழா, இந்த ஆழ்ந்த சத்தியத்தைப் போதிக்கிறது. தனது சொந்தத் தாயை மதிப்பது, ஒருவரின் தலையாய கடமை என்பதை ஒருவர் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும். ஒருவரது தாய் சந்தோஷமாக இல்லை என்றால், நவராத்திரிப் பண்டிகையின் போது, ஒருவர் துர்கா, லக்ஷ்மி, மற்றும் சரஸ்வதியின் பெயரில் செய்யும் அனைத்து செலவுகளும், பூஜைகளும், எந்த வித பயனையும் தரமாட்டா.
உங்களை வளர்த்து ஆளாக்கிய போது, அவள் காட்டிய அதே அன்பையும், தியாக உணர்வையும், உங்கள் தாய்க்கு நீங்கள் திருப்பி அளியுங்கள்- பாபா