azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Nag Mahasaya, the householder disciple of Sri Ramakrishna Paramahamsa, was able to escape the chains of samsara (worldly life) by becoming humbler and smaller, with less and less egoism; he became so tiny that he could creep through to safety. Nag Mahasaya felt, "I am the servant of the servants of God" - Dasoham. Vivekananda, another disciple of Sri Ramakrishna Paramahamsa, on the other hand expanded himself until he identified himself with the entire Universe and so, the chain broke unable to contain his majesty. Vivekananda felt that he was the Master, the Isa who was Idam Sarvam, Sada Soham - he was always steady in the conviction that he was That. This is the identity of the Individual and the Universal (Jiva-Brahma-aikya-anusandhanam), the true celestial wedding. Every individual must endeavour to practice this Consciousness and celebrate this union in their lives. Choose one path that best suits your personality and persist in practice until you attain victory! (Sathya Sai Speaks, Vol 6, Ch 27.)
RELEASE FROM BONDAGE TO INBORN IMPULSES IS THE REAL LIBERATION. - BABA
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் கிருஹஸ்த சீடரான நாக மஹாஸ்யா, தன்னை மேலும் மேலும் பணிவுள்ளவராகவும், சிறியவராகவும், மிகக் குறைந்த அஹங்காரம் கொண்டவராகவும் ஆக்கிக் கொண்டதன் மூலம் ,ஸம்ஸாரத்தின் பிணைச் சங்கிலிகளிலிருந்துத் தப்பித்துக் கொள்ள முடிந்தது; அவர் தன்னை எந்த அளவு சிறியவராக்கிக் கொண்டார் என்றால், பிடிகளுக்கு இடையே ஊர்ந்து சென்று, தப்பித்துக் கொள்ள முடிந்தது. நாக மஹாஸ்யா, ‘’ தான் இறைவனது சேவகருக்கு எல்லாம் சேவகன்- தாஸோஹம் ‘’ என உணர்ந்தார். மறு பக்கம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மற்றொரு சீடரான, சுவாமி விவேகானந்தர், இந்த பிரபஞ்சமனைத்துடனும் இனம் கண்டு கொள்ளும் அளவிற்கு, தன்னை பிரம்மாண்டமானவராக ஆக்கிக் கொண்டார்; அதனால், அவரது மாட்சிமையைக் கட்டுப் படுத்த முடியாமல் பிணைச் சங்கிலிகள் அறுந்து போயின. சுவாமி விவேகானந்தர், இதம் ஸர்வம், ஸதா ஸோகமாக இருக்கும் ஈஸாவாக, அனைத்திற்கும் தலைவனாக தன்னை உணர்ந்தார்- அது, தானே என்ற திடமான நம்பிக்கையில் அவர் எப்போதும் நிலையாக இருந்தார். இதுவே, உண்மையான தெய்வீகத் திருமணமான, ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஒன்றரக் கலந்து விடும் ( ஜீவ- ப்ரம்ம- ஐக்ய- அனுஸந்தானம் ) நிலையாகும். ஒவ்வொருவரும், இந்த விழிப்புணர்வைக் கடைப்பிடிக்கப் பாடுபட்டு, அவர்களது வாழ்க்கைகளில், இந்த ஐக்கியத்தைக் கொண்டாட வேண்டும். உங்களது தனித்தன்மைக்கு ஏற்ற ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, வெற்றி பெறும் வரை, விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பதில் அதில் நிலைத்திருங்கள்.
பிறவி வாசனைகளிலிருந்து விடுபடுவதே உண்மையான மோக்ஷமாகும் - பாபா