azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 05 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 05 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
When the seven colours of the spectrum revolve together, the effect is ‘no colour’; when they stop revolving, the seven colours can be separately identified. When three blades of the electric fan revolve fast and no blade is separately noticeable, they give cool comfort. So too when the qualities of Satwa, Rajas and Tamas (purity, action and inertia) are unrecognisably intertwined, then all that remains is pure happiness and nothing else. Supari (areca nut) is brown; pan (betel leaf) is green; chunam (lime) is white, but, when these three are together chewed, the colour is red! When your three gunas are moderated adequately through spiritual practice, the result is shanti or peace. The lamp is the satwa guna, the wick is tamo guna and the oil is rajo guna. When they are integrated, they give the Light of Wisdom which illumines through all problems. (Sathya Sai Speaks, Vol 6, Ch 27.)
வானவில்லில் காணப்படும் ஏழு வண்ணங்களும் ஒன்றாகச் சுற்றும் போது, அதன் விளைவு ‘’ வண்ணமே அற்ற ‘’ நிலையாகும்; அவை சுற்றுவது நின்றவுடன் ஏழு வண்ணங்களையும் தனித் தனியாகக் காண முடியும். ஒரு மின்விசிறியின் மூன்று விசிறிகளும் வேகமாகச் சுழன்று, ஒரு விசிறியைக் கூடத் தனியாகக் காண முடியாத போது, அவை சௌகரியத்தை அளிக்கின்றன. அதைப் போலவே, ஸத்வ, ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் ஒன்றை ஒன்று பிரித்தறிய முடியாதவாறு பின்னி இருக்கும் போது, அங்கு இருப்பதெல்லாம் தூய ஆனந்தமே அன்றி வேறில்லை. பாக்கு, பழுப்பு நிறமானது, வெற்றிலை பச்சை நிறம் கொண்டது, சுண்ணாம்போ வெண்மையானது; ஆனால் இவை மூன்றையும் சேர்த்து மென்றால், வரும் வண்ணமோ சிவப்பு ! உங்களது மூன்று குணங்களும், ஆன்மீக சாதனையின் மூலம் ஒழுங்குபடுத்தப் பட்டால் விளைவு, சாந்தியே. விளக்கே ஸத்வ குணம், திரியே தமோ குணம், எண்ணெயே ரஜோ குணம். இவை மூன்றும் ஒன்றிணைக்கப் பட்டால், அனைத்து பிரச்சனைகளையும் ஊடுருவி வழி காட்டும் ஞான ஜோதியை அவை தருகின்றன.