azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 02 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 02 Oct 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Gandhi’s mother was a strict disciplinarian and very pure hearted. As the saying goes, “Yatha Raja, Tatha Praja” (As is the king, so are the subjects). She had a maidservant named Rambha, who followed her values and looked after the children with love and care. One day, little Gandhi came running to Rambha and told that he was haunted by fear. Rambha told him, “My dear one, where is the need to fear when the all-protecting Ramachandra is with us always. Recite the name of Rama whenever you are fear- stricken.” From then onwards, Gandhi chanted the name of Rama, and as you all know, he chanted it until his last breath. Can we ever find such noble-hearted women today? See the impact she had on the little child! It is because of such noble hearted women and mothers that young children took to the path of righteousness. (Divine Discourse, Nov 19, 2000)
WHY FEAR WHEN I AM HERE? PLACE ALL YOUR FAITH IN ME.
I SHALL GUIDE YOU AND GUARD YOU ALWAYS. - BABA
மஹாத்மா காந்தியின் தாயார் ஒரு கண்டிப்பானவரும், பரிசுத்தமான இதயம் கொண்டவரும் ஆவார். ‘’ யதா ராஜா, ததா ப்ரஜா ( மன்னன் எப்படியோ, மக்களும் அப்படியே)’’ என்பது பழமொழி. அவருக்கு, அவரது பண்புகளைக் கடைப்பிடித்து, குழந்தைகளை அன்பு மற்றும் பாசத்துடன் பேணுபவரான ரம்பா என்ற ஒரு வேலைக்காரி இருந்தார். ஒரு நாள், குழந்தையான காந்தி ரம்பாவிடம் ஓடி வந்து, தனக்கு பயமாக இருக்கிறது என்று கூறினார். ரம்பா அவரிடம், ‘’ அன்பானவரே! அனைத்தையும் பாதுகாக்கும் ஸ்ரீராமசந்திர மூர்த்தி எப்போதும் நம்முடன் இருக்கும் போது , பயப்பட வேண்டிய அவசியம் என்ன. பயம் வரும்போது எல்லாம், ஸ்ரீராம நாமத்தை ஜபிப்பாயாக ‘’ என்று கூறினார். அப்போதிலிருந்து , காந்தி, ஸ்ரீராம நாமத்தை ஜபித்து வந்தார்; தனது இறுதி மூச்சுவரை அவ்வாறு செய்து வந்தார் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இப்படிப் பட்ட சீரிய இதயம் படைத்த பெண்டிரை இந்நாளில் எங்காவது காண முடிகிறதா? அந்தச் சிறு குழந்தையின் மீது அவள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பாருங்கள் ! இப்படிப் பட்ட சீரிய இதயம் கொண்ட பெண்டிர் மற்றும் தாய்மார்களால் தான், இளம் குழந்தைகள் தர்மத்தின் பாதையைப் பின்பற்றி நடந்தார்கள்.
நானிருக்க பயமேன்? உங்கள் நம்பிக்கை அனைத்தையும் என் மீது வையுங்கள். நான் எப்போதும், உங்களைக் காத்து, வழி நடத்துவேன் - பாபா