azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
The human birth is precious. Sanctify it by leading righteous lives. Do not fritter it away. Whatever you practise any spiritual discipline or not, cultivate love for all. Offer that love as a divine offering to all. Only through love can world unity be promoted. It is because of the absence of love that all kinds of differences arise. Love is God. Live in Love. Make this the ruling principle of your life. Be considerate to everyone. Embodiments of Divine Love! Remember always that God permeates everything in the cosmos. Everything you experience is Divine. Everything you see is Divine. What you eat is Divine. The air you breathe is Divine. You cannot see the air, nor can you grasp it. Likewise you cannot grasp God. The eyes cannot see Him. He can only be experienced in the heart. He is beyond the mind. (Divine Discourse, Mar 24, 1989)
KNOW THAT THE PURPOSE OF HUMAN BIRTH IS TO REACH THE LORD THROUGH WORSHIP. - BABA
மனிதப் பிறவி, விலை மதிப்பற்றது.தார்மீகமான வாழ்க்கை நடத்துவதன் மூலம், அதனைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள். அதை வீணடித்து விடாதீர்கள். நீங்கள் எந்த ஆன்மீக சாதனை செய்தாலும், செய்யாவிட்டாலும், அனைவரிடத்திலும் ப்ரேமையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்,அந்த ப்ரேமையை, அனைவருக்கும் தெய்வீகப் பிரசாதமாக வழங்குங்கள். ப்ரேமையின் மூலம் மட்டுமே உலக ஒற்றுமையை அபிவிருத்தி செய்ய முடியும். ப்ரேமை இல்லாததால் தான், அனைத்து விதமான வேற்றுமைகள் தோன்றுகின்றன. அன்பே இறைவன்.அன்பில் வாழுங்கள்.இதையே உங்களது வாழ்க்கையின் கோட்பாடாகக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரிடத்திலும் பரிவுடன் இருங்கள்.தெய்வீக ப்ரேமையின் திருவருவங்களே! இறைவன் இந்த அகிலம் அனைத்திலும் ஊடுருவி உள்ளான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனுபவிப்பது அனைத்தும் தெய்வீகமே. நீங்கள் காண்பதனைத்தும் தெய்வீகமே. நீங்கள் உண்பதனைத்தும் தெய்வீகமே. நீங்கள் சுவாசிக்கும் காற்றும் தெய்வீகமே . நீங்கள் காற்றைக் காணவும் முடியாது, கையால் பிடிக்கவும் முடியாது. அதைப் போல, நீங்கள் இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது. கண்கள் அவனைக் காண முடியாது. அவனை இதயத்தில் அனுபவிக்க மட்டும் தான் முடியும். அவன் மனதிற்கு அப்பாற்பட்டவன்.
மனிதப் பிறவியின் நோக்கமே, வழிபாட்டின் மூலம்
இறைவனை அடைவதே என்பதை அறிந்திருங்கள் - பாபா