azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Teachers and Gurus, the children you claim to be yours are kamaputras (born out of desire), but children who come to you to learn are premaputras (drawn to you by selfless love). In reality, more than your own children, these pure-hearted innocent children truly deserve your time and love. Hence teach them with love and dedication. Tyaga (Sacrifice) is the real Yoga (spiritual path). Give, and you gain. Enjoyment (Bhoga) results in disease (roga). Grab, and you lose! Recognise the truth of these axioms. There may be many amongst you who intellectually recognise their validity but have had no opportunity to translate them into action. In the Gita, Krishna tells Arjuna, "Be an instrument, O Savyasachi!" I call upon you to be the Lord’s instrument and build a bridge between humanity and Divinity. Dedicate all your skill, strength and scholarship to this great yajna. Your dedicated karma truly is a yajna (sacrificial offering). In return, you will attain peace and bliss as your reward! (Divine Discourse, Jul 25, 1978)
THE DESTINY OF A COUNTRY IS DECIDED BY THE IDEALS IMPLANTED BY THE TEACHERS IN THE MINDS OF THE BOYS AND GIRLS ENTRUSTED TO THEIR CARE. - BABA
ஆசிரியர்களே, குருமார்களே! நீங்கள் உங்களுடையவர்கள் என்று கூறிக்கொள்ளும் பிள்ளைகள் காமபுத்திரர்கள் ( ஆசையின் காரணமாகப் பிறந்தவர்கள் ), ஆனால் உங்களிடம் கற்றுக் கொள்வதற்காக வந்த பிள்ளைகள் ப்ரேமபுத்திரர்கள் (தன்னலமற்ற ப்ரேமையால் உங்களிடம் ஈர்க்கப் பட்டவர்கள் ). உண்மையில் உங்களது சொந்தப் பிள்ளைகளை விடவே, இந்த தூய இதயம் கொண்ட அப்பாவியான பிள்ளைகள், உண்மையிலேயே உங்களது நேரம் மற்றும் ப்ரேமைக்குத் தகுதியானவர்கள். எனவே, அவர்களுக்கு அன்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்றுத் தாருங்கள். தியாகமே , உண்மையான யோகம். அள்ளிக் கொடுங்கள், ஆதாயம் அடைவீர்கள். அனுபவித்து மகிழ்வது ( போகா ), வியாதியில் தான் ( ரோகா ) முடிகிறது . அபகரியுங்கள், நீங்கள் அனைத்தையும் இழப்பீர்கள் ! இந்த மஹாவாக்கியங்களின் சத்தியத்தை உணருங்கள். உங்களில் பலர், அவற்றின் ஏற்புடமையை, புத்தி அளவில் உணர்ந்திருக்கலாம்; ஆனால் அவற்றை செயலில் கொண்டு வருவதற்கான எந்த வாய்ப்பையும் கிடைக்கப் பெறாமல் இருக்கக் கூடும். ஸ்ரீமத் பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜூனனிடம், ‘’ஓ ஸவ்யசாச்சி! ஒரு கருவியாக இரு ! ‘’ என்கிறார். நீங்கள் இறைவனின் கருவியாக இருந்து, மனிதகுலத்திற்கும், தெய்வீகத்திற்கும் இடையே ஒரு பாலம் அமைக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். இந்த மகத்தான வேள்வியில், உங்களது திறமை, வலிமை மற்றும் புலமையை அர்ப்பணியுங்கள். உங்களது இந்த அர்ப்பணிப்பான கர்மம், உண்மையில் ஒரு யக்ஞமே. இதற்கு பதிலாக, நீங்கள், அமைதியையும், ஆனந்தத்தையும் உங்களது பரிசாகப் பெறுவீர்கள் !
அவர்களது பராமரிப்பில் ஒப்படைக்கப் பட்டுள்ள சிறுவர், சிறுமியரது மனங்களில், ஆசிரியர்களால் விதைக்கப் படும் இலட்சியங்களால்,
ஒரு நாட்டின் தலைவிதி நிர்ணயிக்கப் படுகிறது - பாபா