azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Sep 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
People think of the ordinary meaning of ‘Krishna’ as ‘one who is dark’ and forget the deeper and truer meanings of the Lord’s Name. ‘Krishna’ has three meanings. The first one is ‘Krishyati iti Krishnah’ (The one who cultivates is Krishna). What must be cultivated? The field of one’s heart (Hridaya-Kshethra). Lord Krishna cultivates the field of our heart by removing the weeds of bad qualities, watering it with love, ploughing it through Sadhana, and sowing the seeds of devotion. The second meaning is “Karshati iti Krishnah” (The one who attracts you is Krishna). Krishna attracts you through His eyes, His speech, His sports, and by His every action. Through His words, He softens and calms the hearts of even those filled with hatred and makes them rejoice. A third meaning of ‘Krishna’ is ‘Kushyati iti Krishna’ (The One who is always blissful). Krishna is always in a state of bliss! Sage Garga thus, aptly named the child ‘Krishna.’ (Divine Discourse, Aug 14, 1990)
WHEN YOU HAVE FAITH IN THE DIVINE, LIFE BECOMES A VICTORIOUS JOURNEY. - BABA
“ கிருஷ்ணா ‘’ என்றால்,’’ கருப்பான ஒருவர் ‘’ என்ற சாதாரண அர்த்தத்தையே மக்கள் எண்ணுகிறார்களே அன்றி, பகவானது திருநாமத்தின் ஆழ்ந்த மற்றும் உண்மையான அர்த்தங்களை மறந்து விடுகிறார்கள். ‘’ கிருஷ்ணா ‘’ என்பதற்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. முதலாவது, ‘’ க்ருஷ்யதி இதி க்ருஷ்ணஹ ‘’ ( எதை பண்படுத்துபவரோ அவரே கிருஷ்ணர்) என்பது. எதைப் பண்படுத்த வேண்டும்? ஒருவரது இதயம் எனும் நிலத்தை ( ஹ்ருதய-க்ஷேத்ர). பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தீய குணங்கள் என்ற களைகளை நீக்கி, ப்ரேமை எனும் நீர் பாய்ச்சி,ஆன்மீக சாதனை மூலம் அதை உழுது, பக்தி எனும் விதைகளை நடுவதன் மூலம், நமது இதயத்தைப் பண்படுத்துகிறார். இரண்டாவது, ‘’கர்ஷதி இதி க்ருஷ்ணஹ ‘’( எவர் உங்களை ஈர்க்கிறாரோ, அவரே கிருஷ்ணர்). பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அவரது கண்கள், அவரது பேச்சு, அவரது லீலைகள் மற்றும் அவரது ஒவ்வொரு செயலாலும், உங்களை ஈர்க்கிறார். த்வேஷத்தால் நிரம்பியவர்களைக் கூட, தனது வார்த்தைகளின் மூலம், அவர்களது இதயங்களை இதமாக்கி, சாந்தப்படுத்தி, அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறார். மூன்றாவது பொருள், ‘’ குஷ்யதி இதி க்ருஷ்ணஹ ‘’( எப்போதும் ஆனந்தமாக இருப்பவர் ). பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எப்போதும் பேரானந்த நிலையிலேயே இருப்பவர் ! கர்க முனிவர் இதனால் தான் குழந்தைக்குப் பொருத்தமாக ‘’ க்ருஷ்ணா ‘’ என்ற பெயரைச் சூட்டினார்.
உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கும் போது, வாழ்க்கை ஒரு வெற்றிப் பயணமாக ஆகி விடுகிறது - பாபா