azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Devotion helps you attain the bliss of merging with God most easily by channelising towards Him the mental agitations, the sensory and emotional urges. The various modes of worshipping the Lord in temples depict this concept. You will find various ceremonies, from ‘awakening of God’ in the early dawn to ‘putting the Lord in bed’ late at night. These ceremonies are intended to heighten and promote the devotional trends of the wavering mind. Each incident helps sublimation of the appropriate emotion, in a peculiarly charming manner. In the sublimity of that experience, the agitation of lower emotions decline and disappear. The mundane and vulgar feelings of ordinary life become elevated to the status of worship and dedication to the Almighty Presence. The Lord evokes in you the emotion you associate with Him. When the Lord is conceived as the Most Loved One, as Jayadeva, Thukaram, Surdas, Radha, and Meera conceived Him, He manifests Himself as the nearest and the dearest and showers bliss! [Dharma Vahini, Ch 10, The House of God]
THE BASIC QUALITY OF DEVOTION IS THE YEARNING TO REALIZE ONENESS WITH GOD. - BABA
மனக்குழப்பங்கள், புலன்கள் மற்றும் உணர்வுகளின் உந்துதல்கள் ஆகியவற்றை, இறைவனை நோக்கித் திருப்பி விடுவதன் மூலம், இறைவனுடன் ஒன்றரக் கலக்கும் பேரானந்தத்தை வெகு எளிதாக நீங்கள் பெற , பக்தி உதவுகிறது. கோவில்களில், இறைவனை பல்வேறாக வழிபடும் முறைகள், இந்தக் கருத்தைச் சித்தரிக்கின்றன. அதிகாலையில் ’’இறைவனை எழுப்புவது ‘’ என்பதில் தொடங்கி, நள்ளிரவில் “ இறைவனைப் பள்ளி அறையில் வைப்பது ‘’ போன்ற பல சடங்குகளை நீங்கள் கண்டிருப்பீர்கள்.இந்த சடங்குகள் அனைத்தும், அலைபாயும் மனதை உயர்நிலைக்கு கொண்டு சென்று, பக்தியை வளர்ப்பதற்காக ஏற்பட்டவை.ஒவ்வொரு நிகழ்வும் அதற்கே உரித்தான உணர்வை, ஒரு தனிச்சிறப்பான, அழகான முறையில் புடம் போட்டு உயர்த்துவதற்கு உதவுகின்றன.இந்த உயர்நிலை அனுபவத்தில், கீழ்த்தரமான உணர்வுகளின் குழப்பங்கள் குறைந்து, மறைந்து விடுகின்றன. ஒரு சாதாரண வாழ்க்கையின் உலகியலான, கொச்சையான உணர்வுகள், பரம்பொருளின் வழிபாடு மற்றும் அர்ப்பணிப்பு என்ற ஒரு நிலைக்கு உயர்த்தப் படுகின்றன. நீங்கள் எந்த உணர்வை இறைவனுடன் சம்பந்தப் படுத்துகிறீர்களோ, அதை அவன் உங்களுள் வரவழைக்கின்றான். ஜெயதேவர்,துக்காராம், சூரதாஸர், ராதா மற்றும் மீரா ஆகியோர்கள், இறைவனை எவ்வாறு ஒரு அதிப்ரேம ஸ்வரூபனாகக் கருதினார்களோ, அவ்வாறு சிந்தித்தால், அவனும், தன்னையே, மிக நெருங்கியவனாகவும், நேசமுடையவனாகவும் வெளிப்படுத்திக் கொள்வான்.
இறைவனுடன் உள்ள ஒருமையை உணர்வதற்கு ஏங்குவதே,
பக்தியின் அடிப்படைக் குணமாகும் - பாபா