azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The culture of Bharat has laid great stress on the teaching, Matrudevo bhava (revere the mother as God) and Pitrudevo bhava (revere the father as God). Aren’t there many great people in the state of West Bengal? Aren’t there many who are rich and educated? But they could not succeed in life due to lack of faith in God. It was only Ramakrishna Paramahamsa who could lead an ideal life by loving his mother and obeying her commands, due to his implicit faith and devotion to his mother. He taught people that there is nothing greater and nobler in this world than mother’s love. You take the history of any great person in this world; they owe their greatness to their mother. The mother is God, verily. It is, therefore, not proper to hurt the feelings of a mother who is the embodiment of love. It is only when we develop love towards our mother that our life will become happy and prosperous. (Divine Discourse, May 6, 2005.)
DEVELOP FIRM FAITH THAT WHATEVER OUR MOTHER DOES FOR US
UNSELFISHLY IS FOR OUR OWN GOOD. - BABA
பாரதீய கலாசாரம், மாத்ரு தேவோ பவ ( தாயைக் கடவுளாக மதியுங்கள் ), பித்ரு தேவோ பவ ( தந்தையைக் கடவுளாக மதியுங்கள் ) என்ற போதனைக்கு மிக அதிகமான முக்கியத்துவம் அளித்துள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் மிகச் சிறந்த மக்கள் இல்லையா? மிகுந்த தனவந்தர்களும், படித்தவர்களும் இல்லையா? ஆனால், அவர்கள் இறை நம்பிக்கை இல்லாததால், வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரால் மட்டுமே, தாயார் மீது அவர் கொண்டிருந்த உளமார்ந்த நம்பிக்கை மற்றும் பக்தியின் காரணமாக, தனது தாயை நேசித்து, அவளது ஆணைகளுக்கு அடிபணிந்து நடந்ததன் மூலம், ஒரு இலட்சிய வாழ்க்கை வாழ முடிந்தது. தாயின் அன்பை விட சிறந்த அல்லது சீரியது இந்த உலகில் எதுவுமே இல்லை என்று அவர் மக்களுக்கு போதித்தார். இந்த உலகில் எந்தச் சிறந்த மனிதரது வரலாற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்; அவர்களது மேன்மைக்கு, அவர்களது தாயே காரணம். தாய் உண்மையிலேயே தெய்வம் தான். எனவே, அன்பே உருவான ஒரு தாயின் உணர்வுகளைப் புண்படுத்துவது சரியல்ல. நாம், நம் தாயின் மீது அன்பை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, நமது வாழ்க்கை சந்தோஷமாகவும், வளமாகவும் இருக்கும்.
தன்னலமின்றி, நமது தாய் நமக்காகச் செய்யும் எதுவும், நமது நன்மைக்கே என்பதில் திடமான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்- பாபா