azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Once Vivekananda asked Ramakrishna Paramahamsa whether he had seen God. Ramakrishna Paramahamsa emphatically replied, “Yes, I have seen God. I have seen Him just as I am seeing you.” “Then why I don’t see Him?” asked Vivekananda. Ramakrishna replied, “You weep for your family, you suffer for your business and wealth, but do you ever weep or yearn for a vision of God? Do that and you will certainly see God! All the time I am pining only for the vision of God. Therefore, God is visible to me at all times in every human being.” In this world, there is nothing easier than attaining God. You face hardships and feel dejected because you do not understand this truth. Instead of shedding tears for mundane things, why don’t you pine for the vision of God? Don’t go anywhere in search of God. Turn your vision inward. You can see God instantly. Have full faith that God is residing in your heart and experience Him within you. (Divine Discourse, Nov 23, 1999)
ஒருமுறை, சுவாமி விவேகானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை, அவர் இறைவனை தரிசித்து இருக்கிறாரா என்று கேட்டாராம். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் அதற்கு ஆணித்தரமாக, ‘’ ஆம். நான் இறைவனை தரிசித்து இருக்கிறேன். நான் உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படி நான் இறைவனைப் பார்த்திருக்கிறேன் ‘’ என்றாராம். ‘’ பின் ஏன் என்னால் அவனைக் காண முடியவில்லை ?’’ என்று சுவாமி விவேகானந்தர் கேட்டார். ஸ்ரீராமகிருஷ்ணர் அதற்கு, ‘’ நீ உன் குடும்பத்திற்காக அழுகிறாய், உன்னுடைய வியாபாரம் மற்றும் சொத்திற்காகக் கஷ்டப்படுகிறாய்; ஆனால், நீ எப்போதாவது, இறைவனது தரிசனத்திற்காக அழுதோ அல்லது ஏங்கியோ இருக்கிறாயா? அதைச் செய், நீ கண்டிப்பாக இறைவனைக் காண்பாய்! நான் எப்போதும், இறைவனது தரிசனத்திற்காகத் தான் ஏங்குகிறேன். எனவே, ஒவ்வொரு மனிதனிலும், எனக்கு எப்போதும் இறைவன் காட்சியளிக்கிறான்’’ என்று பதிலளித்தார். இந்த உலகில் இறைவனை அடைவதை விட எளிதானது எதுவும் இல்லை. நீங்கள், உண்மையை அறியாததால், கஷ்டங்களை எதிர்கொண்டு,, மனமுடைந்து போகிறீர்கள். உலகியலான பொருட்களுக்காக அழுவதை விடுத்து, இறைவனது தரிசனத்திற்காக நீங்கள் ஏன் ஏங்கக் கூடாது? இறைவனைத் தேடிக் கொண்டு நீங்கள் எங்கும் போக வேண்டியது இல்லை. உங்களது பார்வையை உள் நோக்கித் திருப்புங்கள். நீங்கள் இறைவனை உடனே காண்பீர்கள். இறைவன் உங்கள் இதயத்தில் உறைகிறான் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்து, அவனை, உங்களுள்ளேயே அனுபவியுங்கள்.