azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 11 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 11 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Righteousness (Dharma) has no prejudice or partiality; it is imbued with truth and justice. People must adhere to right-conduct (dharma); they must see that they never go against it. It is wrong to deviate from it. The path of dharma requires people to give up hatred against others and cultivate mutual concord and amity. Through concord and amity, the world will grow day by day into a place of happiness. If these are well established, the world will be free from disquiet, indiscipline, disorder, and injustice. Whatever good value you desire to follow, first grasp its real meaning. Then, you must cultivate it daily and benefit from it. By this means, wisdom grows and lasting joy is earned. The wise, who are impartial and unprejudiced, who are committed to living in dharma, walk on the path of truth (Sathya), as instructed in the Vedas. That is the path for all people today. (Dharma Vahini, Ch 13, ‘The Dharmic Person’)
MORALITY CONSISTS IN ACTING UPTO THE RULES OF RIGHT CONDUCT PRESCRIBED BY SOCIETY AT A PARTICULAR TIME AND PLACE FOR AN INDIVIDUAL OR GROUP. - BABA
தர்மத்திற்கு பாரபட்சம் கிடையாது; அது சத்தியம் மற்றும் நீதியில் தோய்ந்தது. மனிதர்கள் தர்மத்தைப் பற்றி ஒழுக வேண்டும்; ஒருபோதும் அதற்கு எதிராகச் செல்லாமல், அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து பிறழுவது தவறாகும். தர்மத்தின் பாதை, மனிதர்கள் பிறரின் மீதுள்ள த்வேஷத்தை விடுத்து,பரஸ்பர ஒற்றுமை மற்றும் நட்பை அபிவிருத்தி செய்து கொள்வதையே வேண்டுகிறது. ஒற்றுமை மற்றும் நட்புணர்வால், உலகம் நாளுக்கு நாள் ஒரு சந்தோஷமான இடமாக வளர்ந்து விடும். இவை நன்றாக வேறூன்றி விட்டால், உலகம், அமைதியின்மை, ஒழுங்கீனம், கலகம் மற்றும் அநீதி ஆகியவை அற்றவையாக ஆகி விடும். நீங்கள் எந்த நல்ல பண்பைப் பின்பற்ற விரும்புகிறீர்களோ, முதலில் அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பின்னர், அதை அனுதினமும் அனுசரித்து அதிலிருந்து பயன் பெற வேண்டும். இவ்வாறாக, ஞானம் வளர்ந்து, நிரந்தர ஆனந்தம் கை கூடுகிறது. பாரபட்சமின்றி, தர்மத்தின் பாதையில் செல்ல உறுதி பூண்ட ஆன்றோர்கள், வேதங்கள் விதித்த சத்தியத்தின் பாதையில் செல்கிறார்கள். அனைத்து மக்களும், இன்று செல்ல வேண்டிய பாதை இதுவே.
ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் தேசத்தில், ஒரு தனி மனிதன் அல்லது குழுவிற்கு, சமுதாயம் வகுத்துள்ள தார்மீக விதிகளின்படி நடப்பதில் தான் நல்லொழுக்கம் இருக்கிறது- பாபா