azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

When a person dies, his property and assets remain at home; they do not go with him. Their relatives cannot also go; only the good or the bad name they have earned lasts here. So you must live in such a way that posterity will remember you with gratitude and joy. To lead the good life, constant prompting from the God within is a great help. That inspiration can be got only by constantly reciting the Lord's Name and calling on the inner springs of Divinity. The Name is so valuable an instrument to win His Grace, to realise His Presence, to picture His Form, and to remember His Glory. Even if it is repeated from the heart once in the morning, and once in the evening, that will make the griham (home) a griham, instead of a guha (cave). Remember how happy, contented and carefree were the great saints who revelled in that Name - Jayadeva, Tukaram, Kabir, Surdas, Tulsidas, or Ramakrishna. (Sathya Sai Speaks, Vol 6, Ch 27)
WHERE SINGING THE NAME OF THE LORD FILLS THE AIR WITH ITS SPLENDOR AND FRAGRANCE,
THAT PLACE INDEED IS VAIKUNTA (THE ABODE OF VISHNU). - BABA
ஒரு மனிதன் இறக்கும் போது,அவனது சொத்து மற்றும் உடமைகள் வீட்டிலேயே தங்கி விடுகின்றன;அவை, அவனுடன் வருவதில்லை.அவனது சொந்தங்களும் கூட உடன் செல்ல முடியாது; அவன் ஈட்டிய நல்ல அல்லது கெட்ட பெயரே இங்கு நிலைத்து நிற்கும்.எனவே, வருங்காலம் உங்களை நன்றியணர்வுடனும், சந்தோஷமாகவும் நினைவு கூறும் வகையில் நீங்கள் வாழ வேண்டும். நல்ல வாழ்க்கை வாழ, உள்ளுறையும் தெய்வத்தின் இடையறாத உந்துதல், ஒரு மிகச் சிறந்த உதவியாகும். அந்த உத்வேகத்தை, இடையறாத இறை நாமஸ்மரணை மற்றும் உள்ளார்ந்த தெய்வீக ஊற்றினை நினைவு கூறுதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே பெற முடியும். இறைவனது அருளைப் பெறுவதற்கும், அவனது இருக்கையை உணருவதற்கும்,அவனது ரூபத்தை மனதில் சித்தரிப்பதற்கும், அவனது மகிமையை நினைவு கூறுவதற்கும், அவனது திருநாமம் ஒரு விலை மதிப்பற்ற கருவியாகும். இதயபூர்வமாக, காலையில் ஒருமுறை, மாலையில் ஒரு முறை என்று அவனது திருநாமத்தை உச்சரித்தால் கூட, அதுவே ஒரு வீட்டை ( க்ருஹம் ), ஒரு குகையாக ( குஹ ) அல்லாது, ஒரு இல்லமாக ஆக்கி விடும். ஜயதேவர், துக்காராம், கபீர், சூர்தாஸ், துளசிதாஸ் அல்லது ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற தலைசிறந்த ஆன்றோர்கள் அந்தத் திருநாமத்தில் திலைத்து இருந்ததன் மூலம், எவ்வளவு சந்தோஷமாகவும், திருப்தியாகவும், கவலையற்றும் இருந்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
எங்கு, இறைவனது திருநாமத்தைப் பாடுவது, சுற்றுச்சூழலை அதன் காந்தி மற்றும் சுகந்தத்தால் நிரப்புகிறதோ, அந்த இடமே உண்மையில் வைகுண்டமாகும்- பாபா