azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
You clamour for further experience of My divine nature and ask that your faith might be strengthened therefrom. To know the taste of sea water, isn’t a drop on the tongue enough? Do you need to drink it all? It is your waywardness, egoism, and pride that makes you doubt and deny what you once tasted! Isn’t one experience enough? Well, let Me ask, how can the limited know the depth of the Unlimited? How can the ant delve into the mountain? It is beyond you to gauge Me. You have no patience even to deal with the problems of a single family, though it is your responsibility. Imagine My patience that allows Me to listen to and solve problems of million families with infinite love! You can never grasp the strength of this super-worldly bond that ties you to Me. The experience of that bond will come to you unaware. Your duty is to await the moment. Believe and be blessed! (Divine Discourse, Oct 23, 1961)
என்னுடைய தெய்வீக இயல்பைப் பற்றிய மேலும் அனுபவங்கள் வேண்டும் என நீங்கள் கூக்குரலிடுகிறீர்கள்; அதிலிருந்து உங்களது நம்பிக்கை வலுப்பெறக் கூடும் என நீங்கள் கேட்கிறீர்கள். கடல் நீரின் சுவையை உணர, நாக்கில் ஒரு சொட்டு வைத்தால் போதாதா? நீங்கள் அனைத்தையுமா குடிக்க வேண்டும்? உங்களது அலைபாயும் தன்மை, அஹங்காரம் மற்றும் கர்வமே உங்களைச் சந்தேகப்படவும், நீங்கள் ஒருமுறை சுவைத்ததை மறுக்கவும் வைக்கிறது ! ஒரு முறை கிடைத்த அனுபவம் போதாதா? நல்லது, நான் கேட்கிறேன் , ஒரு குறுகிய அளவு படைத்த ஒன்றால், அளவற்ற ஒன்றின் ஆழத்தை அறிய முடியுமா? ஒரு எறும்பு , எவ்வாறு, ஒரு மலையை ஆய்ந்தறிய முடியும்? என்னை, மதிப்பிடுவது என்பது உங்களுக்கு அப்பாற்பட்டது. உங்களது பொறுப்பாகவே இருந்தாலும் கூட, ஒரு தனிக் குடும்பத்தின் பிரச்சனைகளைக் கையாளவே உங்களுக்குப் பொறுமை இல்லை. அளவற்ற ப்ரேமையுடன், கோடிக்கணக்கான குடும்பங்களின் பிரச்சனைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்த்து வைக்கும்படி செய்யும் எனது பொறுமை எப்படிப் பட்டது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். உங்களை என்னுடன் இணைக்கும், இந்த உலகிற்கெல்லாம் அப்பாற்பட்ட பந்தத்தின் வலிமையை உங்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள இயலாது. அந்த பந்தத்தின் அனுபவம் உங்களை அறியாமைலேயே, உங்களுக்கு வரும். அந்தத் தருணத்திற்காக காத்திருப்பது உங்கள் கடமையாகும். நம்புங்கள், ஆசீர்வதிக்கப் படுவீர்கள் !