azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Aug 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Each and every one of you must work hard to overcome the habit of sliding into worry (chinta) and despondency every now and then. Once this weed takes root in your mind, it assumes many forms to assert its hold. Every stage of life is fraught with anxiety; every step in your progress is a cause for worry. In fact, birth, death, old age and illness - every one of these multiply worries of their own. How to get sleep is a cause for worry; how to get up from bed is another worry! Today admission to colleges causes worry; admission to hostels is another worry; then examination causes new worry! But these are matters that are not essential. They should not cause so much heartburn as the problem of removing the fundamental error in your thought process - ignoring the Divine who inspires and guides you always and forever. Do not worry. Develop selfless love with faith and share that love with all. (Divine Discourse, Dec 7, 1978)
A PERSON WITH FAITH WILL NOT WASTE TIME WORRYING ABOUT WHO WILL HELP THEM,
WHEN THEY DEVOTE ALL THEIR TIME AND EFFORTS TO THE DIVINE. - BABA
நீங்கள் ஒவ்வொருவரும், அவ்வப்போது, கவலை மற்றும் விரக்தியில் ஆழ்ந்து விடும் பழக்கத்தை வெல்ல கடுமையாக உழைக்க வேண்டும். இந்தக் களை ஒரு முறை உங்கள் மனதில் வேறூன்றி விட்டால், அது, தனது பிடியை வலுப்படுத்த, பல ரூபங்களை ஏற்கிறது.வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் கவலையால் சூழ்ந்ததே; உங்கள் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியும், கவலைக்கான காரணமாகிறது. உண்மையில், பிறப்பு, இறப்பு, வயோதிகம் மற்றும் வியாதி – இவை ஒவ்வொன்றும் தங்களுக்கே உரித்தான கவலைகளை பெருக்குகின்றன. எப்படித் தூக்கம் பெறுவது என்பது கவலைக்கான ஒரு காரணம்; எப்படி படுக்கையில் இருந்து எழுவது என்பது மற்றொரு கவலை ! இந்நாளில், கல்லூரியில் அனுமதி பெறுவது ஒரு கவலையை உண்டாக்குகிறது; விடுதியில் அனுமதி அடுத்து கவலை; பின்னர் பரீட்சை ஒரு புதிய கவலையை உண்டாக்குகிறது ! ஆனால் இந்த மாதிரி விஷயங்கள் அவ்வளவு அத்தியாவசியமானவை அல்ல. உங்களுக்கு எப்போதும், என்றென்றைக்கும் உந்துதல் அளித்து, வழிநடத்தும் தெய்வீகத்தை உதாசீனப்படுத்தும், உங்கள் சிந்தனையில் உள்ள அடிப்படைத் தவறை நீக்குவதற்கான பிரச்சனையை விட, இவை எல்லாம் அந்த அளவு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக் கூடாது. கவலைப் படாதீர்கள். தன்னலமற்ற ப்ரேமை மற்றும் விசுவாசத்தை அபிவிருத்தி செய்து கொண்டு, அந்த ப்ரேமையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இறை நம்பிக்கை உள்ள ஒருவர், யார் தனக்கு உதவுவார்கள் என்று எல்லாம் கவலைப்படாது, தனது நேரத்தையும், முயற்சிகளையும் இறைவன் பால் செலுத்துவார்- பாபா