azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

This day is called Vyasa Poornima. It is a holy day which must be celebrated with prayer and contrition. That alone can cleanse the heart, not feasting or fasting, which affect only the body. The fact that Sage Vyasa is associated with this day or that Lord Rama or Krishna is connected with some other day is merely an opportunity to mark the day as outstandingly important, when something holy has to be done. It is a full moon today, when the moon shines without any hindrance; when moonlight is bright, cool and full. The mind of man is compared to the moon, for it is as wayward as the moon with its swing from brightness to darkness; this day, the mind too has to be bright, effulgent and cool. Sage Vyasa is the Lokaguru (teacher to the entire world): he is Divine Effulgence. But, even Vyasa can only show you the road. You have to traverse it alone. (Divine Discourse, Jul 24, 1964)
THE GURU ALONE CAN OPEN THE INNER EYE AND CLEANSE THE INNER INSTRUMENTS OF INTUITION. - BABA
இந்த நாள் வியாஸ பூர்ணிமா என்று அழைக்கப் படுகிறது.பிரார்த்தனை மற்றும் தவறு செய்தமைக்கு நெஞ்சறிந்து வருத்துவது ஆகியவற்றுடன் கொண்டாடப் பட வேண்டிய புனிதமான நாள் இது. உடலை மட்டுமே பாதிக்கக் கூடிய விருந்து அல்லது பட்டினி போல் இன்றி,அது மட்டுமே இதயத்தைத் தூய்மைப் படுத்த முடியும். இந்த நாள் வியாஸருடனோ அல்லது மற்றும் ஒரு நாள் பகவான் ஸ்ரீராமர் அல்லது ஸ்ரீகிருஷ்ணருடனோ சம்பந்தப்பட்டது என்று இருப்பது, ஏதோ ஒரு புனிதமான ஒன்றைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பைத் தரும் மிகச் சிறந்த நாள் என்பதையே குறிக்கிறது. இன்று பௌர்ணமி; சந்திரன் எந்தத் தடையும் இன்றி முழுமையாகப் பிரகாசிக்கிறது.; சந்திரனின் ஒளி ப்ரகாசமாகவும், குளுமையாகவும், பூரணமாகவும் இருக்கும். சந்திரன் எவ்வாறு ப்ரகாசத்திலிருந்து இருட்டிற்கு ஊசலாடுகிறதோ, அவ்வாறானதே மனிதனின் மனம் என்பதால், அது சந்திரனுடன் ஒப்பிடப் படுகிறது; இன்று மனமும் தெளிவாகவும், ப்ரகாசமாகவும், குளுமையாகவும் இருக்க வேண்டும். வியாஸ முனிவர் லோக குரு ( உலகனைத்திற்கும் குருவானவர்). அவரே தெய்வீகப் பேரொளியும் ஆவார். ஆனால், வியாஸ முனிவரே கூட, உங்களுக்குப் பாதையைக் காட்டத்தான் முடியும்.நீங்கள் தான் தனியாக அதில் நடந்து செல்ல வேண்டும்.
குருவால் மட்டுமே அகக்கண்ணைத் திறந்து,
அந்தக்கரணங்களை தூய்மையாக்க முடியும்- பாபா