azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Nature is a great store, where all things that help you grasp the truth are found. That truth is first cognised as, “All this is imbued with Brahman (Divinity), directed by and composed of Brahman (Sarvam Brahma Mayam)!” Then the seeker rises to a greater awareness of, “All this is Brahmam (Sarvam Brahmam),” only it appears as something else for a time to the unopened eyes! The final state is one where there is not even an, “All this (Sarvam)” to be posited as Brahman; there is just Brahman: the one and only. This lesson is learnt by people when they study Nature, analysing it and trying to understand it. It is at the mother’s lap that the child learns the art of living; so also it is Nature (Prakriti) that teaches one how to succeed in the hard struggle and win supreme peace (Prasanthi). Break the laws of Nature, and she boxes you in the ear; obey her commands and listen to her warnings, and she will pass on to you your heritage of immortality. (Divine Discourse, Jun 3,1962)
சத்தியத்தைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு உதவும் அனைத்தையும் தன்னுள் வைத்திருக்கும் பெட்டகமே இயற்கை.அந்த சத்தியம் முதலில்,‘’ அனைத்தும் பரப்ரம்மத்தில் தோய்ந்தும், அதனால் இயக்கப்பட்டும், அதனால் ஆனதும் ஆகும் ( ஸர்வம் ப்ரம்ம மயம் )‘’ என்று உணரப்பட்டது.பின்னர் , சாதகர், ஒரு மேலும் சிறந்த விழிப்புணர்வான, ‘’ அனைத்தும் பரப்ரம்மமே( ஸர்வம் ப்ரம்மம் )’’, திறக்காத கண்களுக்கு, சில காலம் அது வேறு ஏதோ ஒன்றாகத் தோன்றுகிறது, என்ற நிலைக்கு உயருகிறார் ! பரப்ரம்மம் ‘’ அனைத்தும் (ஸர்வம்)’’ என்பதே கூட இல்லாமல் இருப்பதே இறுதி நிலையாகும். இருப்பது ஒன்றே ஒன்றான பரப்ரம்மம் மட்டுமே. மக்கள், இயற்கையைப் படித்து, ஆராய்ந்து அதைப் புரிந்து கொள்ள முயலும்போது, இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். தாயின் மடியில் தான் ஒரு குழந்தை வாழும் கலையைக் கற்றுக் கொள்கிறது.; அதைப் போலவே, இயற்கை (ப்ரக்ருதி), ஒருவருக்கு, இந்தக் கடினமான போராட்டத்தில் எப்படி வெற்றி பெற்று, ப்ரசாந்தியை அடைவது என்று போதிக்கிறது. இயற்கையின் நியதிகளை மீறுங்கள்; அவள் உங்களை செவிட்டில் அறைவாள்; அவளது ஆணைகளுக்கு அடிபணிந்து, அவளது எச்சரிக்கைகளுக்கு செவி மடுங்கள்; உங்களது அமரத்துவப் பாரம்பரியத்தை , அவள், உங்களுக்கு அளித்திடுவாள்.