azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Women, who were the bulwarks of Indian culture, the guardians of ancient spiritual wealth, are fast succumbing to flimsy attractions of foppish culture, as is evident from the modes of living and social behaviour of present times. This is the result of the artificial and empty system of education, as well as the subtle pulls of cheap literature and shoddy films. Today’s young women are the mothers and teachers of the generation of leaders to come. Everyone must respect their five Mothers: Deha mata, the mother who gave birth to you; Go mata, the cow that gives sustaining milk; Bhu mata, the land that grows the crops; Desha mata, your motherland that gives protection, care, love, rights and chances to serve and elevate yourself to great heights, and Veda mata, the spiritual treasure that reveals the purpose of life and leads you to Self-Realization. The Deha mata must reveal to the child the glories of all the others; so her responsibility is the greatest and most crucial. (Divine Discourse, Jul 22, 1968)
YOU MUST CONDUCT YOURSELF WITH YOUR MOTHER REFLECTING THE SAME LOVE AND SPIRIT OF SACRIFICE WITH WHICH SHE HAS BROUGHT YOU UP. - BABA
பாரத கலாசாரத்தின் அரண்களாக, புராதன ஆன்மீகச் செல்வத்தின் காப்பாளர்களாகத் திகழ்ந்த பெண்கள், தற்காலத்தில் அவர்கள் வாழும் முறைகள் மற்றும் சமுதாய நடத்தைகளிலிருந்து , மிக வேகமாக, தகுதி அற்ற கலாசாரத்தின் அற்பக் கவர்ச்சிகளுக்கு பலியாகி வருகிறார்கள் என்பது புலனாகிறது. இது, செயற்கையான, வெறுமையான கல்விமுறை மற்றும் மலிவான இலக்கியம் மற்றும் கீழ்த்தரமான சினிமாப் படங்களின் நுட்பமான கவர்ச்சிகளின் விளைவே. இன்றைய இளம் பெண்கள், வரப்போகும் தலைமுறைத் தலைவர்களின் தாய்மார்களும், ஆசிரியர்களும் ஆவர். ஒவ்வொருவரும் அவர்களது ஐந்து விதமான தாய்மார்களை மதிக்க வேண்டும். தேஹ மாதா-உங்களைப் பெற்றெடுத்த தாய்; கோ மாதா- ஊட்டமளிக்கும் பாலைத் தரும் பசுவெனும் தாய்; பூ மாதா – பயிர்களை வளர்க்கும் நிலமெனும் தாய்; தேச மாதா – பாதுகாப்பு, பரிவு, ப்ரேமை, சேவை ஆற்றி, உங்களை நீங்களே உயர்நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கான உரிமைகள் மற்றும் வாய்ப்புக்கள் ஆகியவற்றைத் தரும் தாய்நாடு; மேலும் வேத மாதா- வாழ்க்கையின் குறிக்கோளை உணர்த்தி, உங்களை ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு இட்டுச் செல்லும் ஆன்மீகப் பொக்கிஷமான வேதங்கள் எனும் தாய். தேஹ மாதா, குழந்தைக்கு மற்ற அனைத்துத் தாய்மார்களின் மாட்சிமைகளை எடுத்துக் காட்ட வேண்டும்; எனவே,அவளது பொறுப்பு, தலைசிறந்ததும், மிகவும் முக்கியமானதும் ஆகும்.
உங்களை வளர்த்து ஆளாக்கும் போது, அவள் காட்டிய அதே ப்ரேமை மற்றும் தியாக உணர்வு பிரதிபலிக்குமாறு, நீங்கள் உங்கள் தாயாருடன் நடந்து கொள்ள வேண்டும் - பாபா