azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Atma vidya (science of the Self) alone can fix the mind in Dharma. The students here will be given a glimpse of that Atma vidya; they will develop a keen desire to know about it. It is that knowledge and desire that will stand them in good stead when they encounter the problems of life. Prahlada told his father, "the father who leads his son to God is the only father who deserves the reverence due to that role." Fathers who lead their sons into the vortex of sense pleasure, the volcanoes of physical passion, the boggy marsh of pride and pomp are unaware of their duties and responsibilities. So too, an educational system that keeps children away from God - the only refuge, the only kinsman, the only guide and guard - is really a system where the blind are engaged in blinding those who depend on them. (Divine Discourse, Jul 22, 1968)
THE FATHER, THE MOTHER AND THE TEACHER ARE THE THREE
PRIMARILY RESPONSIBLE FOR MOLDING THE FUTURE OF A NATION. - BABA
ஆத்ம வித்யா மட்டுமே , மனதை ,தர்மத்தில் நிலை கொள்ள வைக்க முடியும். இங்கு மாணவர்களுக்கு, ஆத்ம வித்யாவின் ஒரு சிறு கண்ணோட்டம் அளிக்கப் படும்; அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அவர்கள் ஒரு தீவிர ஆர்வத்தை வளர்த்துக் கொள்வார்கள்.அந்த அறிவும், ஆர்வமுமே, அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் போது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பக்த பிரஹலாதன் , தன் தந்தையிடம், ‘’ எந்த ஒரு தந்தை ,தன் மைந்தனை இறைவன் பால் இட்டுச் செல்கிறாரோ, அவர் மட்டுமே அந்த பாத்திரத்திற்கான பயபக்திக்கு அருகதையுள்ளவர் ‘’ என்று கூறினான். தங்களது மகன்களை, புலனின்பங்களின் சுழற்சிக்கும், உடல் மீதான அதீத ஆர்வம் எனும் எரிமலைகளுக்கும், தற்பெருமை மற்றும் படாடோபம் எனும் புதை குழிகளுக்கும் இட்டுச் செல்லும் தந்தையர்கள்,தங்களது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை அறியாதவர்களே.அதைப் போலவே,ஒரே அடைக்கலம், ஒரே உறவினன், ஒரே வழிகாட்டி மற்றும் பாதுகாவலனான இறைவனிடம் இருந்து, குழந்தைகளை விலகி இருக்கச் செய்யும் எந்தக் கல்வி முறையும்,, தங்கள் மீது சார்ந்திருப்பவர்களையும் குருடர்களாக்கும், குருடர்களைக் கொண்ட ஒரு முறையே ஆகும்.
ஒரு நாட்டை உருவாக்குவதில், தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் என்ற மூவருக்கே, முன் முதல் பொறுப்பு உள்ளது - பாபா