azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
You insure life because you are not quite sure of it, isn't it? To assure yourselves of a comfortable life, you are persuaded to insure and pay premia. But God alone can guard you against the terror of death. You can derive happiness by controlling and conquering the mind and the senses. Iron and steel are produced in blast furnaces, where ore is melted and other components are added. The molten iron is carried in pails by cranes and poured by ladles. Though the ladle handles heat, it is immune to it. The crane holds other materials, but does not hold itself! The mind is like that. It holds, it manipulates, it handles all other things but it cannot carry itself or manipulate and transmute itself! The mind cannot hold the holder, that is to say, the Inner Motivator, God. So in order to save yourselves from the waywardness of the mind and its minions, you have to hold on to the 'Holder’. (Divine Discourse, Mar 11, 1968.)
EVERYONE HAS THE RIGHT TO EARN AND DESERVE THE LORD’S BOUNTEOUS GRACE. - BABA
நீங்கள் வாழ்க்கைக்கு ஆயுள் காப்பீட்டு செய்கிறீர்கள், ஏனெனில் அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை அல்லவா?ஒரு சௌகரியமான வாழ்க்கையை உறுதி செய்யும் பொருட்டு, நீங்கள், ஆயுள் காப்பீடு எடுத்து, அதற்கான கட்டணத்தையும் செலுத்த அறிவுறுத்தப் படுகிறீர்கள். ஆனால், இறைவன் மட்டுமே மரண பயத்திலிருந்து, உங்களைக் காக்க வல்லவர் ஆவார். மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தி, வெல்வதன் மூலம், நீங்கள், சந்தோஷத்தை அடையலாம். இரும்பும், எஃகும், உலைகளில் உற்பத்தி செய்யப் படுகின்றன; அங்கு இரும்புத் தாது உருக்கப் பட்டு, அதனுடன் பிற பொருட்கள் சேர்க்கப் படுகின்றன. உருகிய இரும்பு, தொட்டிகளில், க்ரேன்களின் மூலம் எடுத்துச் செல்லப் பட்டு, அகப்பைகளால் ஊற்றப் படுகின்றன.அகப்பை , வெப்பத்தைக் கையாண்டாலும், அதனால் பாதிக்கப் படுவதில்லை. க்ரேன் மற்றப் பொருட்களைப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், தன்னைத் தானே பிடித்துக் கொள்வதில்லை ! மனமும் அப்படிப் பட்டதே. அது, பிற எல்லாவற்றையும் பிடித்துக் கொள்கிறது, அவற்றைக் கையாளுகிறது; ஆனால், அது , தன்னை எடுத்துச் செல்லவோ அல்லது கையாளவோ அல்லது மாற்றவோ செய்ய இயலாததாகும் ! மனதால், தன்னைப் பிடித்திருப்பவரான இறைவன் எனும் அந்தராத்மாவை, பிடிக்க முடிவதில்லை. எனவே, மனம் மற்றும் அதன் எடுபிடிகளின் அலை பாயும் இயல்பிலிருந்து உங்களை, நீங்களே காத்துக் கொள்ள, நீங்கள் உங்களைப் ‘’ பற்றிக் கொண்டு இருக்கும்’’ இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
இறைவனது அளவற்ற அருளைப் பெற ஒவ்வொருவருக்கும்
உரிமையும், தகுதியும் உள்ளது - பாபா