azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
What a pitiable fate is this? The little ego in man is fed into a huge conflagration by the mind and the senses, and one is caught in the fire of distress. Egoism makes a person see glory in petty achievements, happiness in trivial acquisitions, and joy in temporary authority over others. But, the Immortal within is awaiting discovery to confer bliss and liberation from birth and death. There is a definite technique by which the Immortal spark can be discovered. Though it may appear difficult, each step forward makes the next one easier and a mind made ready by discipline, in a flash discovers that the Divine is the basis of creation. There is no shortcut to this consummation. You must give up all the impediments you have accumulated so far and become light for the journey. Lust, greed, anger, malice, conceit, envy, hate - all these pet tendencies must be shed. (Divine Discourse, Dec 8, 1964)
TRUE DEVOTION REALLY MEANS INSTALLING THE DIVINE IN THE HEART AND
ENJOYING THE BLISS OF THAT EXPERIENCE. - BABA
எவ்வளவு ஒரு பரிதாபகரமான தலைவிதி இது? மனிதனுள் உள்ள ஒரு சிறு அஹங்காரம், மனம் மற்றும் புலன்களால் ஒரு காட்டுத் தீயில் போடப்பட்டுள்ளது; ஒருவர் துயரம் எனும் தீயில் மாட்டிக் கொண்டுள்ளார். அஹங்காரம் ஒரு மனிதரை,அற்பத் தனமான சாதனைகளில் பெருமையையும், சாரமற்ற உடமைகளில் சந்தோஷத்தையும், பிறரின் மீது கிடைக்கும் தாற்காலிகமான அதிகாரத்தில் ஆனந்தத்தையும் , காண வைக்கிறது.ஆனால், உள்ளுறையும் அமரத்துவமான ஆத்மா, தன்னை ஒருவர் கண்டு கொள்வதன் மூலம், பேரானந்தத்தையும், ஜனன, மரண சுழற்சியிலிருந்து விடுதலையையும் அளிக்கக் காத்துக் கொண்டு இருக்கிறது. இந்த அமரத்துவத்தின் ஒளிக்கீற்றைக் கண்டு பிடிப்பதற்கு ஒரு நிச்சயமான உத்தி உள்ளது. அது கடினமானதாகத் தோன்றினாலும், ஒவ்வொரு படியும் அடுத்த படியை எளிதான ஆக்கி, கட்டுப்பாட்டினால் தயார் செய்யப் பட்ட ஒரு மனம் தெய்வீகமே, அனைத்து சிருஷ்டியின் ஆதாரம் என்பதை ஒரு நொடியில், கண்டு பிடித்து விடுகிறது. இந்தப் பேரானந்த நிலைக்கு ஒரு குறுக்கு வழி கிடையாது. நீங்கள் இது வரை குவித்து வைத்துள்ள தடைகளை எல்லாம் உதறி விட்டு, இந்தப் பயணத்திற்கு சுமை குறைவானவராக ஆக வேண்டும். காமம், க்ரோதம், லோபம்,மோஹம், மதம் மற்றும் மாத்ஸர்யம் – இந்த அனைத்து செல்ல மனப்பாங்குகளையும் விட்டொழித்தே ஆக வேண்டும்.
இறைவனை இதயத்தில் பிரதிஷ்டை செய்து , அந்த அனுபவத்தின் பேரானந்தத்தில் திளைத்திருப்பதே உண்மையான பக்தியாகும் -பாபா