azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Today the spiritual exercises are confined to listening to talks and not to practising the teachings. Listening has become a kind of disease. Merely after listening, people go about bragging that they know everything. This crazy boastfulness is deepening people's ignorance. One should ruminate over what has been heard. After rumination, one should do Nididhyasana (put into practice the lessons). Only then there is the triple purity of thought, word and deed. Today people are content with mere listening to discourses. This will not lead to Realisation. The practice of Nama Likhita Japam (repeated writing of the Lord’s Name as a spiritual exercise) promotes harmony in thought, word and deed (first think of the Lord’s Name, then utter it and write). All these three processes should be carried out only with a pure heart. (Divine Discourse, Oct 7, 1993)
IF YOU WISH TO ENJOY ENDURING HAPPINESS, YOU MUST FILL YOUR MIND WITH PURE THOUGHTS AND ENTERTAIN FINE FEELINGS IN YOUR HEART. - BABA
இந்நாளில் ஆன்மீக சாதனைகள்,சொற்பொழிவுகளைக் கேட்டு விட்டு, அந்த போதனைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதோடு நின்று விடுகின்றன. இப்படிக் கேட்பது ஒரு வியாதியைப் போல ஆகி விட்டது.வெறுமனே கேட்ட பிறகு, மக்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். இந்த பைத்தியக்காரத்தனமான தற்புகழ்ச்சி, மக்களின் அறியாமையை மேலும் ஆழமாக்கி விடுகிறது. தான் கேட்டதை ஒருவர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இப்படிச் சிந்தித்த பின், ஒருவர் நிதித்யாஸனம் ( அதை நடைமுறையில் கடைப்பிடித்தல் ) செய்ய வேண்டும். அதன் பிறகே சிந்தனை, சொல் மற்றும் செயல் என்ற மூன்றின் திரிகரண சுத்தி இருக்கும். இன்று மக்கள் வெறும் கேட்பதோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள். இது தன்னை உணர்தல் என்ற நிலைக்கு இட்டுச் செல்லாது. இறைநாம லிகித ஜபம் ( இறைவனது திருநாமத்தை எழுவது என்ற ஆன்மீக சாதனை), சிந்தனை, சொல் மற்றும் செயலின் இசைவை ஊக்குவிக்கும் ( முதலில் இறை நாமத்தை சிந்தித்தல், பின் அதைக் கூறுதல், பின்னர் அதை எழுதுதல் ). இந்த மூன்று முறைகளும், ஒரு பரிசுத்தமான இதயத்துடன் மட்டுமே செய்யப் பட வேண்டும்.
நீங்கள் நீடித்த சந்தோஷத்தை அனுபவிக்க விரும்பினால்,நீங்கள் உங்கள் மனதை தூய சிந்தனைகளால் நிரப்பி,உங்கள் இதயத்தில், சீரிய உணர்வுகளை ஏற்க வேண்டும் - பாபா