azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Whatever scriptures you may study, whatever spiritual efforts (sadhanas) you may practise or pilgrimages you may undertake, unless one succeeds in getting rid of the impurities in the heart, life will remain worthless and meaningless. Purification of the heart is the essence of all scriptural teachings and the basic goal of life. No spiritual study or sadhana can help in purifying your heart unless you makes the effort yourself. And when the heart is purified, it becomes a worthy abode for the Divine. Recognising this fact, the Bhagavad Gita has indicated a three-stage path to Divinity: engaging the body in good deeds, using the mind to develop good thoughts and human qualities, and contemplating on God through Upasana (worship of the Divine). Through this, any individual can reach the stage where, like a river joining the ocean, they merge in the Divine (Brahman). (Divine Discourse, Sep 28, 1984.)
WHEN THE HEART IS PURE, THE LIGHT OF WISDOM SHINES. - BABA
நீங்கள் எந்த வேதங்களைப் படித்தாலும்,எந்த விதமான ஆன்மீக சாதனைகளை மேற்கொண்டாலும், அல்லது தீர்த்த யாத்திரைகளைச் செய்தாலும், ஒருவர் தனது இதயத்தின் அழுக்குகளைக் களைவதில் வெற்றி பெறவில்லை என்றால், வாழ்க்கை மதிப்பற்றதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்து விடும். இதயத் தூய்மையே அனைத்து வேத உபதேசங்களின் சாரமும், வாழ்க்கையின் அடிப்படைக் குறிக்கோளும் ஆகும். நீங்களே அந்த முயற்சியைச் செய்யாவிடில், எந்த வேதப் படிப்போ அல்லது ஆன்மீக சாதனையோ உங்களது இதயத்தைத் தூய்மைப் படுத்துவதில் உதவி புரியாது.இதயம் தூய்மை அடையும் போது, அது தெய்வீகம் உறைவதற்குத் ஒரு தகுதியான சன்னிதானமாக ஆகி விடும். இதை உணர்ந்த, ஸ்ரீமத் பகவத் கீதை, தெய்வீகத்தை அடைவதற்கு, ஒரு மூன்று நிலைகளைக் கொண்ட பாதையைச் சுட்டிக் காட்டுகிறது; உடலை நற்கருமங்களில் ஈடுபடுத்துவது, மனதை நல்லெண்ணங்கள் மற்றும் மனிதப் பண்புகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்துவது மற்றும் வழிபாட்டின் மூலம் இறைவனை தியானிப்பது. இதன் மூலம், எவரும், ஒரு நதி கடலில் சென்று கலப்பதைப் போல, பரப்பிரம்மத்துடன் ஒன்றரக் கலக்கும் நிலையை எய்த முடியும்.
இதயம் பரிசுத்தமாக இருக்கும் போது, ஞான ஜோதி பிரகாசிக்கிறது- பாபா