azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 06 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 06 Jul 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
The performance of Vaidika Karmas (actions prescribed by the scriptures) like sacrificial rites (yagnas), charity and penance, is regarded as punya karmas or meritorious actions. While engaged in these acts, if you are concerned with worldly gains, egotism (ahamkara) arises - there is the feeling, “I am doing these sacred rites”. All actions, good or bad, result in bondage! Chains that bind may be made of gold or iron, but they are chains all the same! Hence the scriptures declare that realising God (Sakshatkaram) and attaining union with God (Brahma prapti) cannot be attained by rituals or good deeds alone. As they are external acts related to the body, they are not conducive to the development of your inner vision. Only when you are able to get rid of egotism and attachment, you can develop the inner vision. To realise the Divine always, the sense of duality must be eradicated. Perceiving divinity everywhere is Wisdom (Advaita Darshanam Jnanam)! (Divine Discourse, Sep 28, 1984)
சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப் பட்ட வைதீக கர்மாக்களான, யக்ஞம், தானம் மற்றும் தவம் ஆகியவை புண்ய கர்மாக்களாகக் கருதப் படுகின்றன. இந்த கர்மாக்களில் ஈடுபட்டு இருக்கும் போது, நீங்கள் உலகியலான லாபங்களில் அக்கறை கொண்டிருந்தால், ‘’ நானே இந்த புனித கர்மங்ளைச் செய்கிறேன் ‘’ என்ற உணர்வான அஹங்காரம் மேல் எழுகிறது. அனைத்து கர்மாக்களும், நல்லவையோ அல்லது கெட்டவையோ பந்தத்தைத் தான் ஏற்படுத்துகின்றன ! பிணைக்கும் சங்கிலிகள், தங்கமாகவோ அல்லது இரும்பாகவோ இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் சங்கிலிகள் தானே ! எனவே தான், வேதங்கள், இறைவனை உணருவது என்ற ஆத்ம சாக்ஷாத்காரமும், அவனுடன் ஒன்றரக் கலத்தல் என்ற ப்ரம்ம ப்ராப்தியும், சடங்குகள் அல்லது நற்கருமங்களால் மட்டுமே அடைய முடியாதவை எனக் கூறுகின்றன. அவை அனைத்தும் உடல் ரீதியான வெளிப்புற கர்மாக்கள் என்பதால், உங்களது உள்ளார்ந்த திருஷ்டியை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு அவை உகந்தவை அல்ல.அஹங்காரம் மற்றும் பற்றுதலை நீங்கள் விட்டொழித்தால் மட்டுமே, நீங்கள் உள்ளார்ந்த திருஷ்டியை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். இறைவனை எப்போதும் உணர்வதற்கு, இருமை உணர்வு முற்றிலும் நீக்கப் பட வேண்டும். இறைவனை எங்கும் காணுவதே ஞானமாகும் ( அத்வைத தர்ஸனம் ஞானம்) !