azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
People are bound by action (karma) and sustained by action. They can achieve anything through action. Their accomplishment lies in their skill in performing actions. The actions performed will have their appropriate consequences, and no one can escape consequences of their actions. So do good actions, develop good thoughts, and join good company to get good rewards in future. As is the seed, so is the tree and its fruits. Hence engage in good actions from an early age. What are good actions? The actions that please God. When you perform actions that please God, you will also have the reward that will please you! Hence scriptures teach us to perform all actions to please God (Sarva karma Bhagavad preethyartham). When you offer all your actions to God, your heart becomes sacred, you can then lead a peaceful life. To keep your heart sacred, with strong determination practice three P’s - Purity, Patience, and Perseverance. (Divine Discourse, Apr 22, 1993)
மனிதர்கள், கர்மாவினால், கட்டுண்டும்,காக்கப் பட்டும் உள்ளார்கள். கர்மாவின் மூலம், அவர்கள் எதை வேண்டுமானாலும், சாதிக்க முடியும். அவர்களது சாதனை, கர்மாக்களை ஆற்றும் போது, அவர்களது செயல் திறனில் தான் இருக்கிறது. கர்மாக்கள், அவற்றிக்குரிய விளைவுகளைக் கொண்டது; எவரும், தங்களது கர்மாக்களின் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. எனவே, எதிர் காலத்தில் நற்பலன்களைப் பெறுவதற்கு, நற்செயல்களை ஆற்றி, நல்லெண்ணங்களை அபிவிருத்தி செய்து கொண்டு, நல்லோரின் நட்பு வட்டத்தில் இணைந்திடுங்கள். விதை எப்படியோ, மரமும் அதன் பழங்களும் அப்படியே. எனவே, இளம் வயதிலிருந்தே நற்கருமங்களில் ஈடுபடுங்கள். நற்கருமங்கள் என்பவை எவை? இறைவனை மகிழ்விப்பவையே அவை. இறைவனை மகிழ்விக்கும் கர்மங்களைச் செய்தால், நீங்கள் மகிழ்ந்திடும் பலனை நீங்களும் கூடப் பெறுவீர்கள். எனவே தான், சாஸ்திரங்கள், அனைத்து கர்மாக்களையும், இறைவனை மகிழ்விப்பதற்காக ஆற்றுமாறு போதிக்கின்றன ( ஸர்வ கர்மா பகவத் ப்ரீத்யார்த்தம்) எப்போது, நீங்கள் உங்களது அனைத்து செயல்களையும், இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறீர்களோ, உங்களது இதயம் புனிதமடைகிறது; பின்னர் நீங்கள் ஒரு சாந்தி நிறைந்த வாழ்க்கையை நடத்துவீர்கள். உங்களது இதயத்தை புனிதமாக வைத்துக் கொள்ள, உறுதியான மனப்பாங்குடன் தூய்மை, பொறுமை மற்றும் விடாமுயற்சியைக் கடைப்பிடியுங்கள்.