azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 27 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 27 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The process of living is the swinging of a pendulum from smile to tear. Childhood is too tender and innocent, youth is too full of folly and faults, middle age is muddled with problems and possible remedies, and old age is spent in regret over past failings. When can you taste some real happiness? Joys and sorrows are the results of the mind's involvement in the transient and the trivial. The inner core of each living being is God. The Sun is not tarnished by its rays falling upon anything harmful. The Self too is unaffected by the effects of the mind pursuing the senses wherever they lead it. When one becomes aware that the Self is God, there can be no fear of death haunting him. Faith is life; absence of faith is death. Only the body dies; the Divine Self (Atma) is beyond birth and death. Aware of this, one is soaked in Ananda (Divine Bliss). (Divine Discourse, Jan 08, 1983)
NATURE IS THE VESTURE OF GOD. IT IMAGES THE SUPREME. - BABA
வாழ்க்கை என்பது, களிப்பிற்கும்,கண்ணீருக்கும் இடையில் நிகழும் ஒரு ஊசலாட்டமே. குழந்தைப் பருவம் மிகவும் மென்மையானதும், அப்பாவித்தனமானதும் ஆகும்; இளமைப் பருவமோ, மடத்தனமும், குறைகளும் நிறைந்ததாகும்; நடுத்தர வயதோ பிரச்சனைகளால் குழம்பியும், சாத்தியமான நிவாரணங்களும் கொண்டது; வயோதிகமோ கடந்த கால தோல்விகளை எண்ணி வருந்துவதில் கழிந்து விடுகிறது. எப்போது தான் நீங்கள் கொஞ்சமாவது உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்? மனம், நிலையற்ற மற்றும் அற்பமானவற்றில் ஈடுபடுவதன் விளைவுகளே சுக, துக்கங்கள். ஒவ்வொரு ஜீவ ராசியின் உட்கரு இறைவனே. தீமையானவற்றில் அதன் கிரணங்கள் படுவதால், சூரியன் களங்கமடைவதில்லை. புலன்கள் எங்கு இட்டுச் சென்றாலும் அவற்றை மனம் தொடருவதன் விளைவுகளால், ஆத்மாவும் கூட பாதிக்கப் படுவதில்லை. எப்போது ஒருவர் ஆத்மாவே இறைவன் என்பதை உணருகிறாரோ, அப்போது, அவரை மரண பயம் வாட்டுவதில்லை; இறை நம்பிக்கையே வாழ்க்கை; நம்பிக்கை இன்மையே இறப்பு. உடல் மட்டுமே இறக்கிறது; தெய்வீக ஆத்மா, பிறப்பு, இறப்பிற்கு அப்பாற் பட்டது. இதை உணர்ந்து விடுங்கள், ஒருவர் ஆனந்தத்தில் திளைத்திருப்பார்.
இயற்கையே இறைவனின் அங்கி. அது பரமாத்மாவை பிரதிபலிக்கிறது - பாபா