azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is a campaign against foes; a battle with obstacles, temptations, hardships, and hesitations. These foes are within and so, the battle has to be incessant and perpetual. Like the virus that thrives in the bloodstream, the vices of lust, greed, hate, malice, pride and envy sap the energy and faith of every being and reduce them to untimely fall. You must strive to diagnose your own character and discover the faults that are infesting it; do not try to analyse the character of others and seek to spot their defects. This self-examination is very necessary to bring to light the defects that might undermine one's spiritual career. People buy clothes with deep colour, so that they may not reveal dust or dirt; they do not prefer white clothes, for they show plainly their soiled condition. But, do not try to hide your dirt in darkness; be ashamed of soiled natures and endeavour to cleanse them fast. (Divine Discourse, Mar 16, 1966)
VIRTUE IS STRENGTH VICE IS WEAKNESS. - BABA
வாழ்க்கை என்பது, விரோதிகளான, தடைகள், தூண்டுதல்கள், கஷ்டங்கள் மற்றும் தயக்கங்களுக்கு எதிரான ஒரு போராட்டமே. இந்த விரோதிகள் உள்ளுறைபவர்கள்; எனவே இந்தப் போராட்டம் இடையறாததாகவும், நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும். இரத்த ஓட்டத்தில் விருத்தியடையும் விஷக்கிருமிகளைப் போல, காம, க்ரோத, லோப,மோஹ, மத, மாத்ஸர்யங்கள் ஒவ்வொரு ஜீவராசியின் சக்தி மற்றும் நம்பிக்கையை உறிஞ்சி எடுத்து அவற்றை , இறுதியாக அழியும் அளவிற்குக் குறைத்து விடுகின்றன. உங்களது சொந்த குணநலன்களை ஆராய்ந்து, அவற்றைப் பீடித்திருக்கும் குறைகளைக் கண்டு பிடிக்க நீங்கள் பாடுபட வேண்டும்; பிறரது குணநலன்களை ஆய்வு செய்து அவர்களது குறைகளைக் கண்டு பிடிக்க முயலாதீர்கள். ஒருவரது ஆன்மீக முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடிய குறைகளைக் கண்டு பிடிப்பதற்கு, இந்த ஆத்ம பரிசோதனை மிகவும் அவசியமானதாகும். அவைகளின் அழுக்கு அல்லது கறைகள் தெரியாமல் இருப்பதற்காக, மனிதர்கள் பல ஆழ்ந்த வண்ணம் கொண்ட உடைகளை வாங்குகிறார்கள்; அவர்கள் வெள்ளை நிற உடைகளை விரும்புவதில்லை ; ஏனெனில், அவை வெளிப்படையாக , அவர்களது கறை படிந்த நிலையை எடுத்துக் காட்டி விடுகின்றன. ஆனால், உங்களது கறைகளை இருட்டில் மறைக்க முயற்சி செய்யாதீர்கள்; கறைபடிந்த மனப்பாங்கினைப் பற்றி வெட்கித் தலை குனிந்து, அவற்றை விரைவாக நீக்கப் பாடுபடுங்கள்.
ஒழுக்கமே பலம், ஒழுங்கீனமே பலஹீனம் - பாபா