azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 16 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 16 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Live with prema (love), in prema, for prema. Then the Lord who is Premaswarupa (Divine Love personified) will grant you all that you need in spite of your not asking for anything. He knows; He is the Mother who does not wait to hear the moan of the child to feed it. His prema is so vast and deep; He anticipates every need and rushes with the required help. You are all waiting anxiously to know when will I restart granting you 'interviews', so that you can place before Me the long lists of korikas (wishes or desires), which you have brought. These wishes go on multiplying; they never end. The fulfilment of one leads to a new series. Strive to arrive at the stage when His wish alone will count and you are an instrument in His Hands. When you fill yourselves with love for God, you achieve Sarupya and Sayujya (likeness of form and absorption in God). Strive for that consummation, not for lesser victories. (Divine Discourse, May 15, 1969.)
STAY AWAY FROM IMPURE LISTENING, IMPURE ACTS, IMPURE WORDS AND IMPURE THOUGHTS. - BABA
ப்ரேமையுடன் , ப்ரேமையில், ப்ரேமைக்காக, வாழுங்கள். பின்னர், நீங்கள் எதையும் கேட்காமலேயே, ப்ரேமஸ்வரூபனான இறைவன், உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளிடுவான். அவன் அனைத்தும் அறிந்தவன்; பாலூட்ட, குழந்தையின் அழுகுரலுக்காகக் காத்திராத தாயைப் போன்றவன், அவன். அவனது ப்ரேமை அளவற்றது, ஆழமானது.அவன் ஒவ்வொரு தேவையையும் எதிர்பார்த்து, அவசியமான உதவியுடன் ஓடி வருபவன். நீங்கள் அனைவரும், நீங்கள் கொண்டு வந்துள்ள, கோரிக்கைகளின் நீண்ட பட்டியலை என்னிடம் சமர்ப்பிக்க, நான் எப்போது உங்களுக்கு ‘’ இன்டர்வியூ’’ தர ஆரம்பிக்கப் போகிறேன் என்று தெரிந்து கொள்ள கவலையுடன் காத்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கைகள் நீண்டு கொண்டே போகின்றன; அவற்றிற்கு முடிவே இல்லை. ஒன்றை திருப்தி செய்வது , அது மற்றும் ஒரு புதிய தொடர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. அவனது ஸங்கல்பம் மட்டுமே முக்கியமானது; நீங்கள் அவனது கரங்களில் ஒரு கருவியே என்ற நிலையை எட்டப் பாடுபடுங்கள். எப்போது, நீங்கள் உங்களை இறைவன் பால் கொண்ட ப்ரேமையால் நிரப்பிக் கொள்கிறீர்களோ அப்போது உங்களுக்கு ஸாரூப்யத்தையும் ( இறைவனை ஒத்த ரூபம்), ஸாயுஜ்யத்தையும் (இறைவனுடன் ஒன்றரக் கலத்தல் ) பெற்று விடுகிறீர்கள். பிற தாழ்ந்த வெற்றிகளுக்கு அல்லாது, அந்தப் பேரானந்த நிலைக்காகப் பாடுபடுங்கள்.
தூய்மையற்றவைகளுக்கு செவி மடுப்பது, தூய்மையற்ற செயல்கள், தூய்மையற்ற சொற்கள் மற்றும் தூய்மையற்ற சிந்தனைகளிலிருந்து தூர விலகி இருங்கள் -பாபா