azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 10 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 10 Jun 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone craves for security, peace, joy and happiness. But most believe that these can be extracted from the world! The result is, people waste their years in eating and drinking, playing and resting, earning and spending. They rush from cradle to grave ad nauseam, drifting along, knowing neither the origin of their journey nor its destination, through the ages. Man has won unique qualities of head and heart through a series of effort-filled lives as members of inferior species; that victory is now reduced to ashes, by this supine sloth. You must have the skill to swim across the waves of joy and grief, of pain and profit. You must be a master of the art of being fully at ease, perfectly calm and unaffected, whatever may happen to your body, senses or mind! Learn the skill of achieving and maintaining inner peace, the art of being ever aware of your own inner Reality (Atma), then you can safely gyrate in the world! (Divine Discourse, Jul 7, 1968)
TO GET ANGRY IS BUT THE EFFORT OF A MOMENT; BUT TO GET PEACE, TO BECOME UNAFFECTED BY THE UPS AND DOWNS OF LIFE, IS THE RESULT OF YEARS OF TRAINING IN VEDANTA. - BABA
ஒவ்வொருவரும்,பாதுகாப்பு, சாந்தி, சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறார்கள். ஆனால், பெரும்பாலோர், அவற்றை உலகிலிருந்து பெற்று விட முடியும் என நம்புகிறார்கள் ! முடிவு என்ன என்றால், மனிதர்கள் தங்களது வருடங்களை, உண்பது, குடிப்பது, விளையாடுவது, உறங்குவது, ஈட்டுவது, செலவழிப்பது என வீணடித்து விடுகிறார்கள். அவர்கள் , தொட்டிலில் இருந்து சுடுகாடு வரை, அவர்களது பயணம் எங்கிருந்து தொடங்கியது, அவர்கள் சேர வேண்டிய இடம் எது என்பதையே அறியாமல் காலம் காலமாக, இடையறாது, அலைந்து திரிகிறார்கள். மனிதன், கீழ்நிலை ஜீவராசிகளாக இருந்து, தொடர்ந்த முயற்சி நிறைந்த வாழ்க்கைகளின் மூலம், ஒரு ஒப்பற்ற, தலை மற்றும் இதயத்தின் குணங்களை வென்றுள்ளான்; இந்த வெற்றி, இப்போது, மல்லாந்து கிடைக்கும் சோம்பேறித் தனத்தால், சாம்பலாகி விட்டது. நீங்கள் , இன்ப, துன்பங்கள், கஷ்ட, லாபங்கள் என்ற அலைகளைக் கடந்து நீந்தி வருவதற்கான திறனைப் பெற்றிருக்க வேண்டும். உங்கள் உடல், புலன்கள் அல்லது மனதிற்கு என்ன நேர்ந்தாலும், அமைதியாகவும், சலனமின்றியும், தெளிவாக இருக்கும் கலையில், தேர்ந்த ஒருவராக, நீங்கள், இருக்க வேண்டும் ! உள்ளார்ந்த சாந்தியைப் பெற்று, அதைப் பேணிக்காத்து, எப்போதும் உங்களது உண்மை நிலையான ஆத்மாவைப் பற்றிய விழிப்புணர்வோடு இருக்கும் திறனை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் இந்த உலகில், பாதுகாப்பாக உலாவி வர முடியும் !
கோபப் படுவது என்பது ஒரு கண நேர முயற்சியே; ஆனால் சாந்தியைப் பெற்று, வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப் படாமல் இருப்பது என்பது, பல வருடங்களில் செய்த வேதாந்தப் பயிற்சியின் விளைவாகும் - பாபா