azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Some may insist that only Sai Bhajan should be sung, only the name and form of Sathya Sai be used. This is a great mistake. You are thereby dishonouring Sai. If you attach yourself to Sai and detach yourself from Krishna, you get a plus there and a minus here; the resultant gain is zero. Do not develop fanaticism or sectarianism in spirituality. Others may have these, but that is no reason why you should meet them with the same failings. Try your best to avoid such infection. If others require help, go and help them! This will make them realise the loving universal nature of your attitude. Never encourage differences based on region, language, religion, or any such flimsy grounds. Narrow-minded ideas will undermine the spiritual outlook, the attitude of unity and oneness which is the keynote of the spirit. Spirituality is a field where inner joy, inner satisfaction, and internal purity are always more important than outer expression! (Divine Discourse, Apr 21, 1967.)
TRUE SPIRITUALITY CONSISTS IN PROMOTING HUMAN UNITY THROUGH HARMONIOUS
LIVING AND SHARING THE JOY WITH ONE AND ALL. - BABA
சிலர், சாய் பஜனை மட்டும் தான் பாடப் பட வேண்டும், சத்திய சாயியின், நாம ரூபங்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என வற்புறுத்தக் கூடும். இது ஒரு மிகப் பெரிய தவறாகும். நீங்கள், இதன் மூலம் , சாயியைத் தான் அவமதிக்கிறீர்கள். நீங்கள் உங்களை சாயியுடன் இணைத்துக் கொண்டு, ஸ்ரீகிருஷ்ணரிடமிருந்து விலகி இருந்தால், உங்களுக்கு அங்கு ஒரு ப்ளஸ் மார்க்கும், இங்கு ஒரு மைனஸ் மார்க்கும் கிடைத்து, ஒட்டு மொத்த லாபம் ஜீரோ ஆகி விடும். ஆன்மீகத்தில், வெறித்தனம் அல்லது பிரிவினைவாதத்தை அபிவிருத்தி செய்து கொள்ளாதீர்கள். பிறரிடம் அவை இருக்கலாம்; அதற்காக நீங்களும் அதே தவறுகளைச் செய்ய வேண்டும் என்ற அர்த்தமில்லை. இப்படிப் பட்ட, தொற்று நோயை முடிந்த வரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுக்கு உதவி தேவைப் பட்டால், அங்கு சென்று உதவுங்கள் ! இது, பிரபஞ்சமயமான உங்களது ப்ரேமை மனப்பாங்கை, அவர்கள் உணர உதவும். பிராந்திய, மொழி, மதம் அல்லது இப்படிப் பட்ட எந்த விதமான அற்ப விஷயங்களில் உள்ள வேறுபாடுகளுக்கு, ஒருபோதும் ஊக்கமளிக்காதீர்கள். குறுகிய மனப்பாங்குடைய சிந்தனைகள், ஆத்மாவின் சிறப்பு அம்சங்களான ஆன்மீக கண்ணோட்டம், ஒற்றுமை உணர்வு மற்றும் ஏகத்துவத்தை, கீழ்மைப் படுத்துபவையாகும். ஆன்மீகம் என்பது, வெளிப்புறத் தோற்றத்தை விட, உள்ளார்ந்த ஆனந்தம், திருப்தி மற்றும் அந்தராத்ம தூய்மை ஆகியவற்றிற்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு துறையாகும் !
உண்மையான ஆன்மீகம் என்பது, இசைவான வாழ்க்கை நடத்தி, எல்லோருடனும் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், மனித குல ஒற்றுமையை அபிவிருத்தி செய்வதில் தான் இருக்கிறது - பாபா