azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as while eating you reject bad food, you must reject bad thoughts and take in only good and wholesome thoughts into the mind. Do not bear any ill-will towards those who may have done some harm to you. By returning evil for evil, how are you better than the other person? It is only when you do good even to the person that causes harm to you that you can show your better nature. Your face is the index of your mind. When you bear ill-will towards anyone, your enmity is reflected in your face and manners. When you entertain good and loving thoughts, your heart is filled with joy and you experience an upsurge of happiness. If you fill your heart with hatred, envy and pride, your life will become a dreary desert. On the other hand, if you fill your heart with love, your entire life becomes a saga of love. [Divine Discourse, Jul 31, 1986]
எப்படி சாப்பிடும்போது, கெட்ட உணவை நீங்கள் ஒதுக்கி விடுகிறீர்களோ, அவ்வாறே, தீய சிந்தனைகளை விலக்கி, நல்ல மற்றும் ஆரோக்கியமான சிந்தனைகளை மட்டுமே மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு யாராவது தீங்கு செய்திருந்தால், அவர்கள் பால் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் கொண்டு இருக்காதீர்கள். தீமைக்குத் தீமையையே செய்தால், நீங்கள் அவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் ஆவீர்கள் ? உங்களுக்குத் தீங்கு இழைத்தவர்களுக்குக் கூட நீங்கள் நன்மை செய்யும் போது மட்டுமே, நீங்கள் உங்களது நல்ல இயல்பை வெளிப்படுத்த முடியும். உங்கள் முகமே , உங்களது மனதின் பிரதிபலிப்பு. நீங்கள் எவரிடமாவது கெட்ட எண்ணம் கொண்டு இருந்தால், அந்தப் பகைமை உங்களது முகம் மற்றும் நடத்தைகளில் பிரதிபலிக்கும். நீங்கள் நல்ல மற்றும் அன்பான சிந்தனைகளைக் கொண்டு இருக்கும் போது, உங்கள் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பி, நீங்கள் பொங்கி வரும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். நீங்கள் இதயத்தை த்வேஷம், பொறாமை மற்றும் தற்பெருமையால் நிரப்பினீர்களானால், உங்களது வாழ்க்கை ஒரு வறண்ட பாலைவனம் ஆகி விடும். அதற்கு மாறாக, நீங்கள், உங்கள் இதயத்தை ப்ரேமையால் நிரப்பினால், உங்களது வாழ்க்கை முழுவதுமே ஒரு ப்ரேம காவியமாகி விடும்.