azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Love! First and foremost, reduce your attachment to the body. As your attachment to the body increases, your suffering also increases. The body is the temple of God. Think that this is not your body but the temple of God. The body is sacred as God resides in it. It is God’s gift to man. Hence, use the body for performing sacred deeds and attaining bliss therefrom. When you share bliss with others, you will experience divinity. Continue your spiritual practices. But remain always suffused with the feeling that God is in you, above you, below you and around you. Never think that God is away from you. “I am not alone. God is with me.” Strengthen this feeling in you and shape your life accordingly. Lead your life with love. [Divine Discourse, May 26, 2002]
ப்ரேமையின் ஸ்வரூபங்களே! முதன் முதலில் உங்களது உடல் பற்றினைக் குறைத்துக் கொள்ளுங்கள்.உங்களது உடல் பற்று அதிகரிக்க, அதிகரிக்க, உங்களது துன்பமும் அதிகரிக்கும். தேஹம், தெய்வம் உறையும் ஆலயம். இது உங்களது உடல் அல்ல, ஆனால் இறைவனது ஆலயம் என்று கருதுங்கள். இறைவன் அதில் உறைவதால், உடலும் புனிதமானதே. அது , மனிதனுக்கு, இறைவன் அளித்த பரிசாகும். எனவே, புனிதமான செயல்களை ஆற்றி, அதிலிருந்து ஆனந்தத்தைப் பெற, இந்த உடலைப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஆனந்தத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது, நீங்கள் தெய்வீகத்தை அனுபவிப்பீர்கள்.உங்களது ஆன்மீக சாதனைகளைத் தொடர்ந்து செய்யுங்கள். ஆனால், இறைவன் உங்களுள்ளும், உங்களுக்கு மேலும், உங்களுக்குக் கீழும், உங்களைச் சுற்றியும் உள்ளான் என்ற உணர்வில் எப்போதும் தோய்ந்திருங்கள். இறைவன் உங்களை விட்டுப் பிரிந்து உள்ளான் என்று ஒருபோதும் கருதாதீர்கள். ‘’ நான் தனியாக இல்லை. இறைவன் என்னுடன் இருக்கிறான் ‘’ உங்களுள் இந்த உணர்வை வலுப்படுத்திக் கொண்டு, அதற்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையை, ப்ரேமையுடன் நடத்துங்கள்.