azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Do not strive to acquire the status of a great person, always strive to become a good person. Greatness may induce one to do evil deeds but acts of a good person always stand out as ideals for others. Ravana was a great man. Rama is the example par excellence of a good man. Both were experts, but how different were their attitude! Ravana, though endowed with extraordinary learning, destroyed himself. The root cause for the destruction of his entire clan was his bad quality of ‘desire’. Hiranyakasipu, master of all five elements, was ruined by his evil trait of anger. Duryodhana was ruined by greed; he refused to give even five villages to Pandavas. All these examples of great people who destroyed themselves and their entire clan, teaches that one evil trait is enough to cause ruin. Imagine how much worse a fate one will be faced with if one has all six evil qualities - lust, anger, greed, pride, envy, and hatred! [Divine Discourse, 22-Nov-1999]
ஒரு பெரிய மனிதர் என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் எனப் பாடுபடாதீர்கள்; ஒரு நல்ல மனிதராக ஆக எப்போதும் பாடுபடுங்கள். மேன்மையானவர் என்ற நிலை ஒருவரைத் தீய செயல்களைச் செய்யத் தூண்டக் கூடும்; ஆனால் ஒரு நல்ல மனிதரின் செயல்கள் , பிறருக்கு இலட்சியங்களாக நிலை நிற்கும்.ராவணன் ஒரு பெரிய மனிதனே. ஸ்ரீராமர், ஒரு நல்ல மனிதருக்கான மிகச் சிறந்த உதாரணம் ஆவார். இருவருமே நிபுணர்களே; ஆனால் அவர்களது மனப்பாங்குகள் தான் எவ்வளவு வித்தியாசமானவை! அசாதாரணமான கல்வியைப் பெற்றிருந்தாலும் கூட, ராவணன் தன்னையே அழித்துக் கொண்டான். அவனது குலம் அனைத்தின் அழிவிற்கான மூல காரணம், அவனது தீய குணமான ‘’ ஆசையே’’. பஞ்ச பூதங்களின் அதிபதியாக இருந்த ஹிரண்யகசிபு அவனது தீய குணமான கோபத்தினால் அழிக்கப் பட்டான். துரியோதனன் பேராசையினால் நாசமடைந்தான்; ஒரு ஜந்து கிராமங்களைக் கூட, பாண்டவர்களுக்குக் கொடுக்க மறுத்தான். தங்களையும், தங்களது குலத்தையும் அழித்துக் கொண்ட இந்தப் பெரிய மனிதர்களின் உதாரணங்கள், ஒரே ஒரு தீய குணமே கூட அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை போதிக்கிறது. அப்படி என்றால், ஆறு விதமான தீய குணங்களான காம, க்ரோத, லோப, மோஹ, மத, மற்றும் மாத்ஸர்யங்கள் ஒருவரிடம் இருக்குமானால், அவர், எப்படிப் பட்ட மோசமான விதியை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள் !