azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 May 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
When good things are spoken you find it difficult to pay attention, but when demeaning and distracting things are said, your ears are alert! This is tragic! Be the master of your behaviour; do not be led away by the impulses of the moment. Be conscious always of what is good for you. Carry on your daily tasks so that you do not make others suffer or suffer yourself. That is the sign of intelligent living! Do not give way to fits of anger, grief, elation or despair. The confusion you exhibit is the result of dark and dull (tamasic) and emotional (rajasic) qualities. Be calm, unruffled and collected (satwic). The more you develop charity for all beings, contrition at your own faults, fear of wrong, and fear of God — the more firmly established you are in peace! (Divine Discourse, Feb 27, 1961.)
A PEACEFUL MIND IS THE ABODE OF LOVE. - BABA
நல்ல விஷயங்கள் பேசப்படும் போது, கவனம் செலுத்துவது உங்களுக்குக் கடினமாக இருக்கிறது; ஆனால் கீழ்த்தரமான மற்றும் குழப்பும் விஷயங்கள் பேசப்படும் போது, உங்கள் செவிகள் மிகவும் கவனமாக இருக்கின்றன ! இது சோககரமானதே ! உங்களது நடத்தையின் எஜமானராக இருங்கள்; கணப் பொழுதின் உந்துதல்களால் ஈர்க்கப் பட்டு விடாதீர்கள். உங்களுக்கு எது நல்லது என்பதில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள். உங்களது அன்றாட அலுவல்களை, உங்களால் பிறருக்கோ அல்லது உங்களுக்கேயோ பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆற்றுங்கள். இதுவே புத்திசாலித்தனமாக வாழ்வதன் அறிகுறியாகும் ! கோபம், துக்கம், மனக்கிளர்ச்சி அல்லது மனத்தளர்ச்சி ஆகியவற்றிற்கு இடமளிக்காதீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் குழப்பம் , தமோ மற்றும் ரஜோ குணங்களின் விளைவே. அமைதியாகவும், நிலைகுலையாமலும், பொறுமையாகவும் (சாத்வீகம்) இருங்கள். அனைத்து ஜீவராசிகளிடமும் தயை, உங்களது சொந்த குறைகளைப் பற்றிய பச்சாதாபம்,தவறைப் பற்றிய அச்சம், இறைவன் பால் ப்ரேமை ஆகியவற்றை எந்த அளவு அதிகமாக நீங்கள் அபிவிருத்தி செய்து கொள்கிறீர்களோ, அந்த அளவு அதிகமாக நீங்கள் சாந்தியுடன் இருப்பீர்கள் !
சாந்தி நிறைந்த மனமே, ப்ரேமை வாழும் இல்லம் - பாபா