azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
What message can I give you for the day? As I see you, My heart overflows with love. When I see so many of you expressing your love for Me, there is no limit to My joy. I have not sent out invitations to any one of you. My love has drawn you to Me. Your love for God and God’s love for you is the true message and exchange that can happen between God and His devotee. Be happy and blissful. Increase your spiritual dimensions. My love is your greatest wealth and good fortune. This is My greatest gift to you. Take good care of this precious gift. This is My blessing to you on this day. Live with the firm conviction that there is one Divinity resident in all. May you all have steady devotion, and sacred, long, and happy life! May all your difficulties be removed! May you experience unalloyed bliss! May you have all this! (Divine Discourse, Nov 23, 2000)
SOFT SWEET SPEECH IS THE EXPRESSION OF GENUINE LOVE. - BABA
இன்றைக்கு என்று, உங்களுக்கு நான் என்ன அறிவுரை கூற முடியும் ? நான் உங்களைக் காணும் போது, எனது இதயம் ப்ரேமையால் நிரம்பி வழிகிறது. உங்களில் இவ்வளவு பேர் என் மீது ப்ரேமையை வெளிப்படுவதைக் காணும் போது, என்னுடைய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. உங்களில் எவருக்கும் நான் அழைப்புகள் அனுப்பவில்லை. என்னுடைய ப்ரேமையே, உங்களை என் பால் ஈர்த்திருக்கிறது. தெய்வத்தின் பால் உங்களுக்கு உள்ள ப்ரேமை, உங்களின் மீது தெய்வம் கொண்டுள்ள ப்ரேமை ஆகியவையே, தெய்வத்திற்கும், அதன் பக்தனுக்கும் இடையே ஏற்படக்கூடிய உண்மையான செய்தியும், பரிமாற்றமும் ஆகும். சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் இருங்கள். உங்களது ஆன்மீக பரிமாணங்களை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். எனது ப்ரேமையை உங்களது மிகச் சிறந்த செல்வமும், அதிருஷ்டமும் ஆகும். இதுவே, உங்களுக்கு என்னுடைய தலைசிறந்த பரிசும் ஆகும். இந்த விலை மதிக்க முடியாத பரிசை, நன்றாகப் பேணிக் காத்துக் கொள்ளுங்கள். அனைவருள்ளும் உறைவது ஒரே தெய்வீகமே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழுங்கள். உங்கள் அனைவருக்கும் நிலை குலையாத பக்தியும், புனிதமான , நீண்ட,சந்தோஷமான ஆயுளும் இருக்கட்டும் ! உங்களது அனைத்து கஷ்டங்களும் நீங்கட்டும் ! நீங்கள் கலங்கமற்ற ஆனந்தத்தை அனுபவிப்பீர்களாகுக ! உங்களுக்கு இவை அனைத்தும் கிடைக்கட்டும் !
இதமான, இனிமையான பேச்சே, உண்மையான ப்ரேமையின் வெளிப்பாடாகும் - பாபா