azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
What I have taken as a sankalpa (resolve) will surely be fructified. But I need not take on a sankalpa if I do not wish to. My own thoughts, sankalpas and ideas depend on how the devotees conduct themselves. My grace is available in full measure for the benefit of all the devotees. Since I move about like an ordinary individual talking and playing with you, many people do not understand My true nature. In this context, even people with great strength of mind cannot recognise the true nature of this Sai and the difference between the outward appearance and the real internal aspect. My objective is to establish unity in mankind and to reveal to them the aspect of divinity which is Brahman, the only goal which one should look for. It is also My duty to make you realise the kind of relationship that should exist between man and man, and that Divinity is present and latent in all human beings. (Summer Showers in Brindavan, 1974, Ch 32.)
நான் எடுத்துக் கொண்டுள்ள ஸங்கல்பம் கண்டிப்பாக நிறைவேறும். ஆனால், எனக்கு விருப்பம் இல்லை என்றால், நான் ஒரு ஸங்கல்பத்தை எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை.எனது சிந்தனைகள், ஸங்கல்பங்கள் மற்றும் கருத்துக்கள், பக்தர்கள் எவ்வாறு நடத்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கும். எனது அருள், அனைத்து பக்தர்களின் நலனுக்காக பரிபூரணமாகக் கிடைக்கக் கூடியதே. நான் உங்கள் மத்தியில், ஒரு சாதாரண மனிதர் போலப் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பதால், பலர் எனது உண்மையான இயல்பைப் புரிந்து கொள்வதில்லை. மிகச் சிறந்த மன வலிமை கொண்ட மனிதர்களாலேயே, இந்த சாயியின் உண்மையான இயல்பையோ மற்றும் வெளிப்புறத் தோற்றத்திற்கும், உண்மையான உள்ளார்ந்த இயல்பிற்கும் உள்ள வித்தியாசத்தையோ உணர முடியாது. எனது குறிக்கோள், மனித குலத்தில் ஒற்றுமையை நிலைநாட்டி, ஒருவர் தேட வேண்டிய ஒரே இலக்கான பரப்பிரம்மம் என்ற தெய்வீகத் தன்மையை, அவர்களுக்கு வெளிப்படுத்துவதே ஆகும். மேலும், மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையில் இருக்க வேண்டிய உறவின் தன்மையையும், அனைத்து மனிதர்களில் இருக்கும் மற்றும் உள்ளுறையும் தெய்வீகத்தையும், உங்களுக்கு உணரச் செய்வதும் கூட எனது கடமையாகும்.