azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
You must crave for the vision of God; only then you are entitled to the status of human-ness. To do so, you must conquer your mind. Remember, true human is one who is the ruler of the mind (manas), not its slave! Every human (manava) must endeavour to reach the Divine (Madhava)! To earn the vision and grace of God, you have to pray to the Personified Power with Name and Form; it is your yearning that decides in what form the Lord appears. You call and He will answer! If you are not earnest, or if you feel indifferent and say, “Let Him come when He wills, in the Form He likes and with the Name He prefers”, He will not come at all! Call on Him with anguish, and He will immediately respond! (Divine Discourse, May 1963)
DEDICATION ENSURES SUCCESS, PURIFIES INNER VISION AND GIVES LASTING JOY. - BABA
நீங்கள் தெய்வத்தின் தரிசனத்திற்காக ஏங்க வேண்டும்; அதன் பிறகே, நீங்கள் மனிதத்துவம் என்ற நிலைக்குத் தகுதி படைத்தவர்களாக இருக்க முடியும். இப்படிச் செய்வதற்கு நீங்கள் உங்கள் மனதை வெல்ல வேண்டும். அதன் அடிமையாக இல்லாமல், மனதிற்கு ( மனஸ்) அதிபதியாக இருப்பவனே, உண்மையான மனிதன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் ( மானவ) , தெய்வ நிலையை ( மாதவ ) அடைவதற்குப் பாடுபட வேண்டும். தெய்வ தரிசனத்தையும், அருளையும் பெறுவதற்கு, நீங்கள் , நாம, ரூபத்துடன் கூடிய பரமாத்ம சக்தியை வழிபட வேண்டும் ; உங்களது ஏக்கமே தெய்வம் எந்த ரூபத்தில் தோன்ற வேண்டும் என்பதை முடிவு செய்கிறது. நீங்கள் அழையுங்கள், அவன் பதிலளிப்பான் ! நீங்கள் ஆத்மார்த்தமாக இல்லாமலோ அல்லது அலட்சியமாகவோ, ‘’ அவன் எப்போது , அவன் விரும்பும் எந்த ரூபத்தில், அவனுக்குப் பிடித்த எந்த நாமத்துடன், வர வேண்டும் என ஸங்கல்பிக்கிறானோ அப்போது வரட்டும் ‘’ என்று கூறினீர்கள் என்றால் அவன் வரவே மாட்டான் ! வேதனையுடன் அவனை அழையுங்கள், அவன் உடனே விரைந்து வந்திடுவான் !
சிரத்தை, வெற்றியை உறுதி செய்து, ஆத்ம திருஷ்ட்டியை பரிசுத்தப் படுத்தி, நிரந்த ஆனந்தத்தை அளிக்கிறது - பாபா