azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Self is nothing but the principle of the all pervasive Atma (Divine Self). There is only one Self. Hence the scriptures state God is one without a second (Ekam eva Advitiyam Brahma). It is rather surprising that people are unable to believe this principle of unity. You have faith in what is broadcast on television and radio, but do not have faith in the Self. One without faith in the Self is verily blind. In this world every being is an embodiment of Divinity. Whomsoever you salute, it reaches God! Likewise, whomsoever you criticise, the criticism too reaches God. So do not criticise or hate anybody. There are many people who undertake spiritual practices like recitations, meditation and yoga. No doubt these are sacred activities and one may undertake them. But it is very essential to recognise the principle of unity. There is only one God and He is omnipresent. Why are you not able to believe this all-pervasive Divinity? [Divine Discourse, Apr 14, 2001]
ஆத்மா என்பது, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள பரமாத்ம தத்துவமே அன்றி வேறில்லை. இருப்பது ஒரே ஆத்மாதான். எனவே தான் வேதங்கள், இறைவன், இரண்டாவது என்று ஒன்று இல்லாத ஒருவனே எனக் கூறுகின்றன ( ஏகம் ஏவ அத்விதீயம் ப்ரம்மா). இந்த ஒருமைத் தத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. டெலிவிஷன் மற்றும் ரேடியோவில் ஒளி/ஒலி பரப்புவதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால், ஆத்மாவின் மீது நம்பிக்கை இல்லை. ஆத்மாவின் மீது நம்பிக்கை இல்லாதவன் உண்மையிலேயே பார்வை அற்றவனே. இந்த உலகில் ஒவ்வொரு ஜீவராசியும் தெய்வீக ஸ்வரூபமே. நீங்கள் எவரை வணங்கினாலும் அது, இறைவனையே சென்று அடைகிறது. அதைப் போலவே, நீங்கள் எவரை விமரிசித்தாலும், அந்த விமரிசனமும் கூட இறைவனுக்கே சென்றடைகிறது. எனவே, எவரையும் விமரிசிக்கவோ அல்லது வெறுக்கவோ செய்யாதீர்கள். ஆன்மீக சாதனைகளான பாராயணங்கள்,தியானம் மற்றும் யோகா ஆகியவை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சந்தேகமின்றி இவை புனிதமான செயல்களே தான்; ஒருவர் அவற்றை செய்யலாம். ஆனால், ஒருமைத் தத்துவத்தை உணர்வது மிகவும் அத்தியாவசியமாகும். இறைவன் ஒருவனே ; அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். அனைத்திலும் ஊடுருவி நிற்கும் இந்த தெய்வீகத்தை உங்களால் ஏன் நம்ப முடியவில்லை?