azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Today is no different from yesterday. If you do good now, you will reap its benefits in future. So, sanctify your actions. Remember, immortality is not attained through action, progeny or wealth. It is attained only by sacrifice! The bliss you get from sacrifice is eternal. It is true wealth and can never diminish! To acquire such everlasting wealth, invest your time in the contemplation of God. Divinity must pervade all that you see, hear and feel. Love is the greatest wealth and treasure. Let every action of yours be filled with love. Love begets sacred rewards. Let the whole world be filled with love. Love alone can safeguard countries and make them prosperous. Live in the constant company of all-pervasive Divinity. Why fear when I am with you, in you and around you? If you have faith, God will protect you wherever you are! (Divine Discourse, Apr 14, 2001.)
IF YOU FEEL YOU ARE A HUNDRED PERCENT DEPENDENT ON GOD, HE WILL LOOK AFTER
YOU AND SAVE YOU FROM HARM AND INJURY! - BABA
இன்று, நேற்றை விட வித்தியாமானதல்ல.இப்போது நீங்கள் நல்லதைச் செய்தால், அதன் பலன்களை , எதிர்காலத்தில் அறுவடை செய்வீர்கள். எனவே, உங்களது செயல்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். அமரத்துவம் என்பது, செயல், சந்ததி அல்லது செல்வத்தால் அடையப் படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது தியாகத்தினால் மட்டுமே அடையப் படுவதாகும்! தியாகத்தினால் நீங்கள் பெறும் ஆனந்தம் நிரந்தரமானது. அதுவே உண்மையான செல்வம்; அது ஒருபோதும் குறைவதில்லை! இப்படிப் பட்ட நிரந்தரமான செல்வத்தைப் பெற, உங்களது நேரத்தை, இறைச் சிந்தனையில் செலவிடுங்கள். நீங்கள் காண்பவை, கேட்பவை மற்றும் உணர்பவை அனைத்திலும் தெய்வீகம் ஊடுருவி இருத்தல் வேண்டும். ப்ரேமையே தலைசிறந்த செல்வமும், பொக்கிஷமும் ஆகும். உங்களது ஒவ்வொரு செயலும் ப்ரேமையால் நிரம்பி இருக்கட்டும். ப்ரேமை, புனிதமான பரிசுகளைப் பெற்றுத் தருகிறது. உலகனைத்தும் ப்ரேமையால் நிரம்பி இருக்கட்டும். ப்ரேமை மட்டுமே , நாடுகளைப் பாதுகாத்து, அவற்றை வளமாக இருக்கச் செய்ய முடியும். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள தெய்வீகத்தின் நட்பு வட்டத்தில், இடையறாது இருங்கள். நான் உங்களுடன், உங்களுள், உங்களைச் சுற்றி இருக்கும் போது பயம் ஏன் ? உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால், இறைவன், நீங்கள் எங்கிருந்தாலும் காத்திடுவான்!
நீங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் இறைவனைச் சார்ந்துள்ளீர்கள் என நம்பினால், அவன் உங்களை போஷித்து, உங்களை துன்பம் மற்றும் துயரத்திலிருந்து காத்திடுவான் ! - பாபா