azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Today marks the commencement of the (Tamil and Kerala) New Year. Many such New Years have come and gone by. Everyone expects the new year to confer on them and the world at large peace, happiness and prosperity. But the welfare of the world depends on your conduct and behavior. Your conduct depends on your mind. The nature of the mind depends on thoughts. Only when your thoughts are based on truth, will the world flourish. If you aspire for the welfare of the world, see to it that your thoughts and actions are in accordance with your aspirations. If you have anger in you, you cannot escape misery. One with desires can never attain happiness. Less luggage, more comfort. Desires are your luggage. Reduce them in order to lead a comfortable life. A greedy person can never attain prosperity. Give up greed and you will be happy, prosperous and blissful!(Divine Discourse, Apr 14, 2001.)
DESIRE DESTROYS DEVOTION, ANGER DESTROYS WISDOM, GREED DESTROYS WORK
– HENCE SACRIFICE THESE BAD QUALITIES AT THE LORD’S FEET. - BABA
இந்நாள், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இப்படிப் பட்ட பல புத்தாண்டுகள் வந்து, போய் விட்டன. ஒவ்வொருவரும், புத்தாண்டு தங்களுக்கும், உலகனைத்திற்கும் சாந்தி, சந்தோஷம் மற்றும் சௌக்கியங்களைத் தரும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உலகத்தின் க்ஷேமம் , உங்களது நடத்தை மற்றும் நல்லொழுக்கத்தைப் பொறுத்தே இருக்கிறது. உங்களது நடத்தை, உங்களது மனதைப் பொறுத்து இருக்கிறது. மனதின் இயல்பு, சிந்தனைகளைப் பொறுத்து இருக்கிறது. உங்களது சிந்தனைகள் , சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே, இந்த உலகம் வளமாக இருக்கும். நீங்கள் இந்த உலகத்தின் க்ஷேமத்தை நாடுபவராக இருந்தால், உங்களது சிந்தனைகளும், அந்த நாட்டங்களுக்கு ஏற்றவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் கோபம் இருக்குமானால், நீங்கள் துயரத்திலிருந்து தப்ப முடியாது. ஆசைகள் கொண்ட ஒருவன் ஒருபோதும் சந்தோஷமாக இருக்க முடியாது. குறைந்த சுமை, அதிக சுகம். ஆசைகளே உங்களது சுமைகள். ஒரு சௌகரியமான வாழ்க்கை வாழ்வதற்கு, அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு பேராசை உள்ள ஒருவன் ஒருபோதும், சுபிட்சத்தைப் பெற முடியாது. பேராசையை விட்டு விடுங்கள், நீங்கள் சந்தோஷமாகவும், க்ஷேமமாகவும்,ஆனந்தமாகவும் இருப்பீர்கள் !
ஆசை, பக்தியை அழிக்கிறது, கோபம் ஞானத்தை அழிக்கிறது, பேராசை , உழைப்பை அழிக்கிறது – எனவே இந்த கெட்ட குணங்களை பகவானின் பொற்பாத கமலங்களில் அர்ப்பணித்து விடுங்கள் - பாபா