azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Take My own instance. I never exult when I am extolled, nor shrink when I am reviled. Few have realised My purpose and significance, but I am not worried. When things that are not in Me are attributed to Me, why should I worry? When things that are in Me are mentioned, why should I exult? "Sayeeki Sarvamu yes, yes, yes" (for Sai it is always yes!). If you say, "Yes, you are the Lord," Yes, I am the Lord to you, if you say "No", I too echo the same. I am Anandam, Shantam, Dhairyam (Bliss, Peace and Courage). Take Me as your Atma tatwam (Inner Atmic Reality); you won't be wrong. Resolve from this day to see only the good in others, and to develop the good in yourselves. That is the best sadhana (spiritual endeavour). Nurturing anger and hatred in the heart is like carrying a pot with many holes for bringing water. Discard anger, hate, envy and greed; do it by dwelling always on the Name that summarises and signifies the Glory of God. (Divine Discourse, Mar 30, 1965.)
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் போற்றப்படும் போது ஒருபோதும், பூரிப்பு அடைவதும் இல்லை; தூற்றப்படும்போது துவண்டு விடுவதும் இல்லை. வெகு சிலரே என்னுடைய நோக்கத்தையும், முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டு இருக்கிறார்கள், ஆனால், நான் அதற்காகக் கவலைப்படுவதும் இல்லை. என்னிடம் இல்லாதவற்றை, எனக்கு இருப்பதாகக் கூறப்படும் போது நான் ஏன் கவலைப் பட வேண்டும்? என்னிடம் இருப்பவற்றைக் கூறும்போது நான் ஏன் பூரிப்பு அடைய வேண்டும்? ‘’ சாயிக்கு ஸர்வமு YES,YES,YES ( சாயிக்கு எப்போதும், ஆமாம், ஆமாம், ஆமாம் தான் ) நீங்கள், ‘’ ஆமாம், நீங்கள் தெய்வம் தான் ‘’ என்றால், ஆமாம், நான் உங்களுக்கு தெய்வமே; நீங்கள் , ‘’ இல்லை’’ என்றால், நானும் கூட அதையே எதிரொலிக்கிறேன். நான் ஆனந்தம், சாந்தம் மற்றும் தைரியம். என்னை, ஆத்ம தத்துவமாக எடுத்துக் கொள்ளுங்கள்; உங்கள் முடிவு தவறானதாக இருக்காது. இன்றிலிருந்து, பிறரிடம் நல்லதை மட்டுமே காண்போம் என்றும், உங்களுள்ளும், நல்லவற்றை அபிவிருத்தி செய்து கொள்வோம் எனவும் பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவே மிகச் சிறந்த ஆன்மீக சாதனையாகும். இதயத்தில் கோபத்தையும், த்வேஷத்தையும் வளர்த்துக் கொள்வது, பல ஓட்டைகள் உள்ள பானையில் தண்ணீர் கொண்டு வருவதைப் போலாகும். கோபம், த்வேஷம், பொறாமை மற்றும் பேராசையை விட்டு விடுங்கள்; தெய்வத்தின் மாட்சிமையைத் தொகுத்துக் குறித்துக் காட்டும் இறைநாமத்தை எப்போதும் தியானிப்பதின் மூலம், இதனைச் செய்யுங்கள்.