azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 29 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 29 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Jesus instilled great faith in people who lived during his lifetime. One of those fishermen was named by Jesus as Peter. He developed intense love and faith towards Jesus. From then on, all the fishermen regularly used to take Jesus out on their fishing expeditions and after their return in the evening, Jesus used to expound spiritual matters to them. When Peter’s father passed away, his mother was filled with sorrow, but Jesus consoled her by telling, “Death is but a dress of life. Wherefore do you shed tears? Death is like changing one’s dress. Therefore stop grieving. These physical bodies come and go, so do not waste your thought on these ephemeral things. The indweller (dehi) who lives inside this body is the true Divinity! Anyone with a physical body cannot escape vicissitudes of life. Without hardships no one can exist. Death follows birth and with the same certainty misery follows happiness!” [Divine Discourse, Dec 25, 2002]
DO NOT CONTEMPLATE ON DEATH; IT IS JUST AN INCIDENT IN LIFE.
CONTEMPLATE ON GOD, WHO IS THE MASTER OF ALL LIFE - BABA
ஏசு கிருஸ்து, அவர் காலத்தில் வாழ்ந்த மக்களுள், சிறந்த நம்பிக்கையை ஊட்டினார்.அந்த மீனவர்களில் ஒருவருக்கு, பீட்டர் என்ற பெயரை ஏசு கிருஸ்து சூட்டினார்.அவர் ஏசு கிருஸ்து மீது தீவிரமான அன்பையும், நம்பிக்கையும் அபிவிருத்தி செய்து கொண்டார்.அப்போதிலிருந்து,எல்லா மீனவர்களும், அவர்களது மீன் பிடிக்கும் பயணங்களில் ஏசு கிருஸ்துவை தவறாமல் அழைத்துச் சென்றனர்; அவர்கள் மாலையில் திரும்பி வந்தவுடன், ஏசு கிருஸ்து அவர்களுக்கு ஆன்மீக விஷயங்களை விளக்குவது வழக்கம்.பீட்டருடைய தந்தையார் இறந்த போது, அவரது தாய் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார்; ஆனால், ஏசு கிருஸ்து, அவரிடம், ‘’மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு ஆடையே அன்றி வேறில்லை. அப்படி இருக்க நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?மரணம் என்பது ஒருவர் தனது உடையை மாற்றுவது போன்றதே. எனவே, துக்கப் படுவதை நிறுத்துங்கள். இந்த பௌதீகமான உடல்கள் வரும், போகும், எனவே உங்களது சிந்தனைகளை இந்த நிலையற்ற பொருட்களின் மீது வீணடிக்காதீர்கள். இந்த தேஹத்தின் உள் உறைபவரே (தேஹி), உண்மையில் தெய்வீகமானவர்! ஒரு பௌதீகமான உடல் கொண்டவர் எவரும் வாழ்க்கையின் இடர்பாடுகளிலிருந்து தப்பிக்க முடியாது. கஷ்டங்கள் இன்றி, ஒருவரும் வாழ முடியாது. இறப்பு, பிறப்பைத் தொடரும்; அதே போல, துக்கமும் கண்டிப்பாக, சந்தோஷத்தைத் தொடரும் ‘’ என்று ஆறுதல் கூறினார்.
இறப்பைப் பற்றிச் சிந்திக்காதீர்கள், அது வாழ்க்கையில் வெறும் ஒரு சம்பவமே. அனைத்து உயிர்களின் தலைவனாகிய இறைவனைப் பற்றிச் சிந்தியுங்கள் - பாபா