azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
When Adi Shankara was residing at Varanasi with his pupils, he came across a scholar, who was immersed in complicated rules of grammar. When asked why he had taken up this intensive study, he replied that it would easily fetch him a few pieces of silver. "If I am designed a pandit, I can go to the home of some big zamindars (landlords), and hope to receive alms and offerings from them for the upkeep of my large family," he said. Shankara then advised him appropriately and charged him with self-confidence and courage. Returning to his hermitage, Shankara wrote a verse summarising the advice he gave the poor scholar thus: Bhaja Govindam, bhaja Govindam, bhaja Govindam, moodha mate. Samprapte sannihithe kale, nahi nahi rakshati dukrun karane (Praise God, Praise God, Praise God, you foolish mind! When death approaches, rules of grammar cannot save you). The study of these verses and the inspiration derived from them will promote discrimination and detachment, and thus, prepare the mind for the vision of the Supreme. [Divine Discourse, May 21, 1973]
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர், தனது சீடர்களுடன் காசியில் வசித்து வந்த போது, இலக்கணத்தின் சிக்கலான விதிகளில் மூழ்கி இருந்த ஒரு அந்தணரைக் கண்டார். இந்தத் தீவிரப் பயிற்சியை அவர் ஏன் செய்கிறார் என்று கேட்ட போது, அது தனக்கு சில வெள்ளிக் காசுகளை எளிதாகப் பெற்றுத் தரும் என அவர் பதிலளித்தார். ‘’ நான் பண்டிதர் என்று பெயர் வாங்கி விட்டால், சில பெரிய ஜமீன்தாரர்களின் வீட்டிற்குச் சென்று, எனது பெரிய குடும்பத்தை நடத்துவதற்குத் தேவையான பிக்ஷையும், தக்ஷிணைகளும் பெற முடியும் என நம்புகிறேன் .’’ என்றார். ஆதி சங்கரர், பின்னர், அவருக்குத் தகுந்த அறிவுரை அளித்து, அவருக்குத் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டினார். தனது ஆசிரமத்திற்குத் திரும்பிய பின்,அந்த ஏழை பண்டிதருக்கு தான் அளித்த அறிவுரையை, ஒரு கவிதையாக இவ்வாறு புனைந்தார்; பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், கோவிந்தம் பஜ மூடமதே. ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி , நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே ( கோவிந்தனைப் பாடு, கோவிந்தனைப் பாடு, கோவிந்தனைப் பாடு, ஓ மூட மனமே ! மரணம் சமீபத்தில் வரும்போது, இலக்கண விதிகள் உன்னைக் காப்பாற்ற முடியாது ), இந்தப் பாடல்களைப் படித்து, அதிலிருந்து பெறப்படும் உத்வேகம், பகுத்தறிவையும், பற்றின்மையையும் வளர்க்கும்;, அதன் மூலம் ஆத்ம சாக்ஷாத்காரத்தைப் பெற மனதை தயார் செய்யும்.