azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
God is not separate from you. Do not be under the impression that God is present only in temples. Body is the temple and the indweller is God (Deho Devalaya Prokto Jeevo Deva Sanathanaha). So you do not need to go in search of God elsewhere. Turn your vision inward. Then you will find God, who is the embodiment of bliss. You are getting drowned in illusion on account of excessive attachment to the body. Get rid of body attachment and develop attachment towards God. Then you will become God yourself. God and human beings are not separate from each other. They are like image and reflection. God is in everybody. This temple of the body is able to move around because God is within. Scriptures reveal - Satyam Jnanam Anantam Brahma (Divinity is Truth, wisdom and infinity). You must tread along the path of truth and wisdom in order to understand and experience the Divine principle (Brahman). [Divine Discourse, Nov 19, 2000]
இறைவன் உங்களிடமிருந்து வேறுபட்டவன் அல்ல.இறைவன் ஆலயங்களில் மட்டும் தான் இருக்கிறான் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள். இந்த உடலே ஆலயம், இறைவனே உள்ளுறையும் தெய்வம் ( தேஹோ தேவாலய ப்ரோக்தோ ஜீவோ தேவ ஸனாதன:). எனவே, இறைவனைத் தேடிக்கொண்டு நீங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. உங்களது திருஷ்ட்டியை உள்நோக்கித் திருப்புங்கள். பின்னர், சச்சிதானந்த ஸ்வரூபனான இறைவனை நீங்கள் காண்பீர்கள். உடல் மீது கொண்டுள்ள அதிகப்படியான பற்றுதலின் காரணமாக , நீங்கள் மாயையில் மூழ்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.உடல் பற்றை விடுத்து, இறைவன் பால் பற்றுதலைக் கொள்ளுங்கள். பின்னர், நீங்களே , தெய்வமாகி விடுவீர்கள். தெய்வமும் , மனிதர்களும் ஒருவரை விட்டு ஒருவர் வேறுபட்டவர் அல்ல. அவர்கள் பிம்பமும், பிரதிபிம்பமும் போன்றவர்கள். இறைவன் ஒவ்வொருள்ளும் உறைகிறான். இறைவன் உள்ளிருப்பதால் தான், இந்த உடல் எனும் ஆலயம், அசைந்து திரிய முடிகிறது. வேதங்கள் – சத்யம், ஞானம், அனந்தம் ப்ரம்மா ( பரப்ரம்மம், சத்யம், ஞானம் மற்றும் அளவற்றதும் ஆகும் ) என வெளிப்படுத்துகின்றன. பரப்ரம்ம தத்துவத்தைப் புரிந்து கொண்டு அனுபவிப்பதற்கு, நீங்கள் சத்யம் மற்றும் ஞானத்தின் பாதையைப் பற்றி ஒழுக வேண்டும்.