azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

It must be explained to people who come to Prasanthi Nilayam that silence is the very first rung of the ladder of spiritual endeavour and the hallmark of this place! From here, they must learn to make every place, wherever they are, a Prasanthi Nilayam. Loud talk disturbs those who practise namasmarana (remembrance of Lord's name) or meditation (dhyana) or recitation (japam)! Noise breeds further noise. This is a workshop, where damaged minds and hearts come for repair or overhaul. In workshops there will be the din of hammer, the clang of wheel, the whirr of engine and the clatter of chains. In this workshop, only the whisper of the Name of God should be heard. With new parts fitted and new coats of paint, cars emerge out of the workshop as good as new and they run smoothly, without trouble, for miles and miles. People must find Prasanthi Nilayam as a workshop for persons, who are weary, travel-worn, or about to enter upon a long journey. [Divine Discourse, Feb 24, 1965]
SILENCE IS THE SPEECH OF THE SPIRITUAL SEEKER. - BABA
பிரசாந்தி நிலயத்திற்கு வருபவர்களுக்கு, நிசப்தமே ஆன்மீக சாதனை எனும் ஏணியின் முதல் படி என்பதும் மற்றும் அதுவே இந்த இடத்தின் தனி அம்சம் என்பதும், விளக்கிக் கூறப் பட வேண்டும் ! அவர்கள் எங்கிருந்தாலும், ஒவ்வொரு இடத்தையும், ஒரு பிரசாந்தி நிலயமாக மாற்ற வேண்டும் என்பதை இங்கிருந்து, அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உரத்த குரலில் பேசுவது, இறை நாமஸ்மரணை அல்லது தியானம் அல்லது ஜபம் செய்பவர்களுக்கு இடையூறாக இருக்கும். கூச்சல், மேலும் கூச்சலை உருவாக்குகிறது. பழுதடைந்த மனங்களும், இதயங்களும் செப்பனிடப்படுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்காக வரும் ஒரு பட்டறையே இந்த இடம். சாதாரணமான பட்டறைகளில், சம்மடி அடி ஓசையும், சக்கரங்களின் கண கண ஒலியும், எஞ்சின்களின் விர்ரென்ற சத்தமும், இணைப்புச் சங்கிலிகளின் கடகடப்பும் இருக்கும். இந்தப் பட்டறையிலோ, இறைநாமத்தை மெல்லியதாக உச்சரிப்பது மட்டுமே கேட்கப் பட வேண்டும். புதுப் பாகங்கள் பொருத்தப் பட்டு, புதிய வர்ணம் பூசப்பட்டு, கார்கள், பட்டறையிலிருந்து, புதியவை போல வெளி வந்து, எந்த பிரச்சனையும் இன்றி, பல மைல்கள் சீராக ஓடும். வாடிய, பயணம் செய்து களைத்த, அல்லது ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கத் தயாராக உள்ளவர்களுக்கான ஒரு பட்டறையாக, பிரசாந்தி நிலயத்தை மக்கள் காண வேண்டும்.
மௌனமே, ஆன்மீக சாதகரின் மொழியாகும் - பாபா