azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

You derive exaltation while worshipping a carved stone idol in the temple. How much more exalted should you be while worshipping the self-same God residing in the temple-hearts of the men and women amongst you! And not merely in the human frames; God lives in every bird, beast, tree, pebble and speck of dust! Remember, the grace of God cannot be won by merely repeating His glories! Recite the name of your chosen Lord, with its halo of meaning clear in your mind and soaked into your acts and feelings. The Americans who sang bhajans today paid attention to the tune and its beat; they also learnt the meaning of each song and sang it from their heart, respecting its spirit with bha-va (feelings), ra-ga (tune) and tha-la (rhythm) - Bha-ra-tha - that entitles them to be called Bharatiyas! The culture of ‘Bharat’ is built on rati (attachment) to Bhagawan; so, any person, independent of their race, who is attached to the Lord is a Bharatiya! (Divine Discourse, Jul 19, 1970)
YOUR HEART IS LIKE A VESSEL. FILL IT WITH QUALITIES OF TRUTH, LOVE AND SACRIFICE. - BABA
கோவிலில் உள்ள செதுக்கிய ஒரு கல் விக்ரஹத்தை வழிபடுவதில் நீங்கள் குதூகலம் அடைகிறீர்கள். உங்களிடையே உள்ள ஆண் மற்றும் பெண்களது இதயமெனும் கோவிலில் குடியிருக்கும் அதே இறைவனை வழிபடுவதில், நீங்கள் இன்னும் எவ்வளவு அதிகம் பெரு மகிழ்ச்சி கொள்ள வேண்டும் ! மனித உடல்களில் மட்டும் அல்ல, இறைவன் ஒவ்வொரு பறவை,மிருகம், மரம், கூழாங்கல் மற்றும் தூசிக் கறையில் கூட உறைகிறான் ! அவனது மாட்சிமைகளை வெறுமனே திரும்பத் திரும்பக் கூறுவதால் மட்டும், இறைவனது அருளை வெல்ல முடியாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இறைவனது திருநாமத்தை, அதனது அர்த்தத்தைத் தெளிவாக மனதில் கொண்டும், உங்களது செயல்கள் மற்றும் சிந்தனைகளில் அது தோய்ந்திருக்குமாறும், ஜபியுங்கள். இன்று பஜனை பாடிய அமெரிக்கர்கள் அதனது ராகம் மற்றும் தாளத்தில் கவனம் செலுத்திப் பாடினார்கள்; ஒவ்வொரு பாடலின் அர்த்தத்தைக் கற்றுக் கொண்டு,அதனை இதய பூர்வமாக, பாவம், ராகம்,மற்றும் தாளத்துடன் பாடினார்கள்- பா-ரா-த- அதுவே அவர்களை பாரதீயர்கள் என்று அழைப்பதற்கு ஏற்றவர்களாக ஆக்கி உள்ளது ! ‘’ பாரதத்தின்’’, கலாசாரம், இறைவன் மீது ‘’ ரதி ‘’ ( பற்றுதல் ) வைப்பதை ஆதாரமாகக் கொண்டதாகும். எனவே, எவராயினும்,அவர்கள் எந்த இனத்தவராயினும், இறைவன் மீது பற்றுதல் கொண்டவர்களாக இருந்தால், அவரும் ஒரு பாரதீயரே !
உங்கள் இதயம் ஒரு பாத்திரத்தைப் போன்றது; அதை சத்யம், ப்ரேமை மற்றும் தியாகம் என்ற குணங்களால் நிரப்புங்கள் - பாபா