azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
People earn much wealth and various degrees, but where is the defect? Many think that wealth causes all evil things, and degrees are detrimental. No, both of them are faultless. Water is pure and sweet, but when stored in a red coloured bottle, water appears to be red and when stored in purple bottle, it appears purple. From where did the colours appear? The individual is the bottle; bad or good is reflection of the individual attributes. If the individual is rajasic or passionate, then the wealth and education become useless. If the individual is of satwic or noble nature, then the actions and education would become noble too. Therefore the heart must be pure. In this context it is said: Chitta suddhi leni Shiva pooja yetiki? - What is the use of worship of Shiva (God) without purity of the heart? Atma sudhdhi leni acharamadiyela? - What is the use of rituals without purity of the individual? Patra sudhdhi leni pakamela? - How can one cook pure and delicious food without cleanliness of the vessels? (Divine Discourse, Apr 04, 1992)
A HEART SATURATED WITH LOVE OF GOD CAN NEVER ENTERTAIN THOUGHTS OF VIOLENCE. - BABA
மனிதர்கள் மிக அதிகமாக தனத்தையும், பட்டங்களையும் சம்பாதிக்கிறார்கள்; பின் குறை எங்கு இருக்கிறது? பலர், செல்வமே பல தீங்கான விஷயங்களை உண்டாக்குகிறது என்றும் பட்டங்கள் சீரழிவானவை என்றும் எண்ணுகிறார்கள். இல்லை. இரண்டுமே குற்றமற்றவை. தண்ணீர், தூய்மையானதும், இனிமையானதும் ஆகும் ; ஆனால் அது ஒரு சிவப்பு வண்ண பாட்டிலில் வைக்கப் பட்டால் சிவப்பாகவும், ஊதா வண்ண பாட்டிலில் வைக்கப் பட்டால், ஊதாவாகவும் தோன்றும். இந்த வண்ணங்கள் எங்கிருந்து தோன்றின? தனி மனிதனே இந்த பாட்டில்; நல்லவை அல்லது கெட்டவை தனி மனித இயல்புகளின் பிரதிபலிப்பே. ஒருவர் ரஜோ குணமானவராக இருந்தால், பின்னர் தனமும் கல்வியும் வீணானவையாக ஆகி விடுகின்றன. ஒருவர் சாத்வீக குணம் படைத்தவராக இருந்தால், அவரது செயல்களும் கல்வியும், சீலமானவையாக ஆகி விடுகின்றன. எனவே, இதயம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தான், ‘’ சித்த சுத்தி லேனி,சிவ பூஜை யேதிகீ’’ – இதயத் தூய்மை இன்றி சிவ பூஜையினால் என்ன பயன் ?; ‘’ ஆத்ம சுத்தி லேனி ஆசார மதியெலா ? ‘’ – தனி மனிதத் தூய்மை இன்றி சடங்குகளால் என்ன பயன்?; ‘’ பாத்ர சுத்தி லேனி பாக மெலா? – சமைக்கும் பாத்திரங்கள் தூய்மையாக இல்லாவிடில், ஒருவர் எவ்வாறு தூய்மையான மற்றும் சுவையான உணவைத் தயாரிக்க முடியும்?, என்று கூறப்படுகிறது.
இறை அன்பில் தோய்ந்த இதயம், ஒருபோதும்,
வன்முறை சிந்தனைகளுக்கு இடமளிக்காது - பாபா